தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

Attack On Tamil Students: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபியினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 20, 2023, 05:26 PM IST
  • தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல்.
  • பெரியார், கார்ல் மார்க்ஸ் உருவப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி.
  • தமிழக மாணவர்களைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் title=

சென்னை: நேற்று பிப்ரவரி 19 (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி ஏபிவிபி மற்றும் இடதுசாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழக நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க: "உங்களில் ஒருவன்" 'மோடி, இபிஸ், தாமரை, பாஜக' குறித்த கேள்விகளும் ஸ்டாலின் அளித்த பதில்களும்

இதுக்குறித்து தமிழ்நாடு முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், “ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் அவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

மற்றொரு ட்வீட்டில், “தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News