ENG vs WI உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக All-Rounders பட்டியலில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர்களின் பட்டியலில் தனது பெயரை இணைத்த இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 11, 2020, 04:02 PM IST
ENG vs WI உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக All-Rounders பட்டியலில் இணைந்த  பென் ஸ்டோக்ஸ் title=

Cricket News: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சாதனை செய்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8 ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், பென் ஸ்டோக்ஸ் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர்களின் பட்டியலில் தனது பெயரை இணைத்துள்ளார். அது மட்டுமல்லாமல், அவர் உலகின் இரண்டாவது அதிவேக ஆல்ரவுண்டராக என்ற சாதனையும் படைத்தார். 

இந்த செய்தியும் படிக்கவும் - #ENGvWI 1st Test: 143 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கும் முதல் போட்டி

முதல் டெஸ்ட் போட்டியின் (england-vs-west-indies) மூன்றாம் நாளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் விக்கெட்டுக்களை எடுத்தவுடன் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை எட்டினார். முதல் இன்னிங்சில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 14 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஸ்டோக்ஸ் முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தமின் கிளப்பில் இணைந்துள்ளார். 

இந்த சிறப்பு சாதனைக்கு ஐ.சி.சி யும் ஸ்டோக்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஸ்டோக்ஸுக்கு முன்பு, மேற்கிந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் இந்தியாவின் கபில் தேவ் (Kapil Dev) ஆகியோரால் இந்த சாதனை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரியும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். சோபர்ஸ் 63 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார், ஸ்டோக்ஸ் 64 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை எட்டினார்.

இந்த செய்தியும் படிக்கவும் - இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாள் 1983 ஜூன் 25

முன்னதாக, ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிராத்வைட்டை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பின்னர், போட்டியின் மூன்றாவது நாளில் நடந்த இறுதி அமர்வில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஜோசப் மற்றும் ஷேன் டோரிச் ஆகியோரின் விக்கெட்டுகள் பென் ஸ்டோக்ஸ் வசம் ஸுக்கு சென்றன. முதல் இன்னிங்சில் 43 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் (Ben Stokes) இங்கிலாந்துக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கினார். 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து (England) 204 ரன்கள் எடுத்தது, பதிலுக்கு மேற்கிந்திய தீவுகள் 318 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்துள்ளது.

Trending News