ஜோதிடத்தில் சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படும் நிலையில், சந்திரனின் ராசியான கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆவதன் காரணமாக, வரும் ஆடி மாதம் சில ராசிகளுக்கு அமர்களமாய் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சூரியனின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை வரை எல்லா இடங்களிலும் மதிப்பு, மரியாதை மற்றும் வெற்றியைப் பெறுகிறார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
சூரியன் பெயர்ச்சி: சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்ளும். இந்நிலையில் ஜூலை 16 முதல் சூரியன் கடக ராசியில் பெயர்ச்சி ஆவதால், மேஷம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, வாழ்க்கையில் சந்தோஷம் ஆகியவை கிடைக்கப் போகிறது.
கிரகங்களின் ராஜாவான சூரியன் கடக ராசிக்குள் செல்வது கடக சங்கராந்தி என்றும் கூறப்படுகிறது. அதனால் ஆடி மாதம் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி: உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்க்கையில் நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.
ரிஷப ராசி: குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்லலாம். வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் வெற்றி இரண்டையும் அடைவீர்கள். பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடனான உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
மிதுன ராசி: வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கை கொடுக்கும். வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. உங்கள் துணையுடன் திடீர் சுற்றுப் பயணமும் செல்லலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் முன்பை விட மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
சிம்ம ராசி: வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் நஷ்டத்தையும் ஆபத்தையும் சந்திக்க வேண்டி வரும். நிதி ரீதியாக வலுவான நிலையில் இருப்பீர்கள். பொருளாதார நிலைமை மேம்படும்.
விருச்சிக ராசி: நீங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனினும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் இருந்தாலும், செலவுகள் அதிகரிப்பதைக் காணலாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.