ஒருவர் உங்களிடம் சாதாரண நண்பனை போல தான் பழகுகிறாரா அல்லது உங்கள் மீது அவருக்கு ஏதேனும் காதல் உணர்வு உள்ளதா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும்.
உண்மையாகாவே ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்றால் அந்த பெண்ணுடன் தனியே நேரத்தை செலவிட விரும்புவார், இதற்காக அவர் பல திட்டங்களையும் வைத்திருப்பார்.
சமூக வலைத்தளங்களில் அந்த பெண் பதிவிடும் அனைத்து போஸ்டுகள் மற்றும் ரீல்ஸ்க்கும் அவர் கமெண்ட் மற்றும் ரியாக்ட் செய்துகொண்டே இருப்பார்.
விரும்பிய பெண்ணிடம் பேசுகையில் நேரடியாக கண்களை பார்த்து மட்டுமே பேசுவதில் ஆர்வம் காட்டுவார், இது இருவரிடையே ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்தும்.
முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் பரிசு என அனைத்து நிகழ்வுகளையும் தவறாமல் நினைவில் வைத்துக்கொள்வார்.
பிடித்த பெண்ணுடன் வேறு யாராவது நெருக்கமாக இருந்தாலோ அல்லது நெருக்கமாக இருக்க முயற்சி செய்தாலோ அதை பார்த்து அவர் பொறாமைப்படுவார்.
அவரால் முடிந்த அளவுக்கு அந்த பெண்ணிற்கு பிடித்த பொருட்களை அடிக்கடி பரிசளிப்பார், உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்.