Shukran Peyarchi 2025: மீனத்தில் வரும் ஜன. 28ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால் இந்த மூன்று ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் உச்சம் பெறுவார்கள். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Venus Transit 2025 In Pisces: செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவைக்கு சுக்கிரன் பகவான்தான் பொறுப்பு. அப்படியிருக்க சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்வதால் மீனம் தவிர இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சுபமானதாகும்.
ஜோதிடத்தின் படி, சுக்கிர பகவான் (Shukran) சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். சுக்கிரன் செல்வத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் அதிபதி ஆவார்.
ஒவ்வொரு மாதமும் சுக்கிர பகவான் வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி (Shukran Peyarchi) அடைவார். 12 ராசிகளுக்கும் முழுமையாக ஒரு சுழற்சி அடைய சுக்கிர பகவான் ஒரு வருடம் ஆகும்.
சுக்கிர பெயர்ச்சியால் (Venus Transit 2025) சில ராசிகளுக்கு திடீரென பணம் கொட்டும். அந்த வகையில் தற்போது சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைய இருக்கிறார். வரும் ஜன. 28ஆம் தேதி சுக்கிர பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைவதால் பலருக்கும் பொருளாதார பலமாகும். அவர்கள் தங்களுக்கு தேவையான சொகுசான பொருள்களை வாங்கு குவிப்பார்கள்.
மீனத்தில் (Pisces) சுக்கிர பெயர்ச்சி நடைபெறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இதனால் பொருளாதார பயன் இருக்கும் என்பது இங்கே காணலாம்.
கடகம் (Cancer): சுக்கிர பகவான் இந்த ராசிக்காரர்களின் 9ஆம் வீட்டில் குடியேறுவார். இது மிகவும் அதிர்ஷ்டமாகும். உடல்நலன் சிறப்பாக இருக்கும். தீராத நோயும் கூட குணமாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பொருளாதார அளவிலும் சிறப்பாக இருப்பீர்கள். உங்களது செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம் (Leo): சுக்கிர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கும் நன்மையையே தரும். நீங்கள் சுய தொழில் தொடங்கலாம், இந்த காலகட்டத்தில் அந்த தொழிலும் வேகமெடுக்கும். உங்களுக்கு என தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். நீண்ட காலமாக நடைபெறாமல் இருக்கும் பணிகள் நிறைவு பெறும். வேலையிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தை மூலம் பெரிய லாபம் உண்டாகும்.
கும்பம் (Aquarius): இதுவரை உங்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இப்போது அடிக்கப்போகிறது. பணியிடத்தில் வேலை மகிழ்ச்சியானதாக இருக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் சேர்ந்த வரும். இதனால் பொருளாதாரம் வலுவாகும். வணிகத்திலும் லாபம் அதிகரிக்கும். பழைய முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் வரும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.