ஜோதிட சாஸ்திரப்படி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்...
சனி தற்போது அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார். தற்சமயம் கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி கதியில் தீபாவளிக்குப் பிறகு அதாவது நவம்பர் 15-ம் தேதி பயணிக்க உள்ளார். இது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று பார்ப்போம்.
சனி வக்ர நிவர்த்தி மனித வாழ்விலும் நாட்டிலும் உலகிலும் நேரடியாக பாதிக்கும். கர்ம பலன்களைத் தரும், நீதி வழங்குபவருமான சனி பகவான், ஜூன் மாதத்தில் இருந்து, தீபாவளிக்குப் பிறகு வக்ர நிவர்த்தி பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சனிபகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறப் போகும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியால் நன்மை பயக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள் மற்றும் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். வேலை அல்லது வணிக நோக்கங்களுக்காக பயணம் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். மத அல்லது சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி நன்மை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலனை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேமன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் வசதிகள் பெருகும். இது தவிர, குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும், மேலும் வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம். பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகளைப் பெறலாம்.
சனியின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். சமூக மற்றும் மதப் பணிகளைச் செய்வதால் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தை பெறலாம். நிதி நிலை வலுவடையும். சிறந்த யோசனைகளுடன் வியாபாரத்தை கையாள முடியும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.