சஞ்சு சாம்சனுக்கு முதல் மரியாதை கிடையாது... ரூ.18 கோடி இவருக்கு தான் - ஏன் தெரியுமா?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும், அதில் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Oct 09, 2024, 14:04 PM IST

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு வரும் அக். 31ஆம் தேதிக்குள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறோம் என்பது அணிகள் பிசிசிஐக்கு அறிவிக்க வேண்டும். அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யார் யாரை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

1 /8

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அவர்கள் அதன்பின் பலமுறை பலமான அணியாக திகழ்ந்தாலும் கூட கோப்பையை வெல்லவே முடியவில்லை.  

2 /8

மொத்த 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) 6 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ளது. அதிலும்ஸ சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டு முறை (2022, 2024) ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ளது.  

3 /8

குமார் சங்கக்காரா தலைமை பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் சாம்சன் மட்டுமின்றி ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஹெட்மயர், யுஸ்வேந்திர சஹால், ரவிசந்திரன் அஸ்வின், போல்ட் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அந்த அணி சிறப்பாக செயல்பட்டது.  

4 /8

தற்போது ராகுல் டிராவிட் (Rahul Dravid) தலைமை பயிற்சியாளராக மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரும் மாற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   

5 /8

இந்திய அணிக்கு (Team India) டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த கையோடு ராஜஸ்தான் அணிக்கு பொறுப்பேற்றிருப்பதால் ராகுல் டிராவிட் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு டிராவிட் யாரை யாரை தக்கவைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

6 /8

அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக் (Riyan Parag), ஜாஸ் பட்லர், சந்தீப் சர்மா ஆகியோர் நிச்சயம் நேரடியாக தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது. அதிலும் சந்தீப் சர்மா (Sandeep Sharma) Uncapped வீரராக ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்படுவது உறுதி.   

7 /8

ஹெட்மயர், சஹால், அஸ்வின் ஆகியோரில் ஒருவரை மீதம் இருக்கும் ஒரு RTM மூலமாக தக்கவைக்க ராஜஸ்தான் முயற்சிக்கும். இதில், ரியான் பராக் ரூ.11 கோடி ஸ்லாட்டை பெறுவது உறுதி. மீதம் இருக்கும் இடங்கள்தான் சிக்கல். ஜாஸ் பட்லர் (Jos Butler) அதிக தொகைக்கு (ரூ. 18 கோடி) தக்கவைக்கப்பட்டால், மீதம் உள்ள ரூ. 18 கோடி ஸ்லாட்டை யார் பெறுவார்கள் என்ற கேள்வி வருகிறது.   

8 /8

சஞ்சு சாம்சன் வெற்றிகரமான கேப்டனாக இருந்தாலும் ஜெய்ஸ்வாலின் (Yashasvi Jaiswal) அதிரடி தொடக்கம் ராஜஸ்தானுக்கு அதிமுக்கியமானது. எனவே, சஞ்சு சாம்சனுக்கு ரூ.14 கோடியை ஒதுக்கிவிட்டு, ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தலா ரூ.18 கோடியை பெறலாம். இல்லையெனில், பட்லர் ரூ.14 கோடியை பெற்றுவிட்டு, ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் தலா ரூ. 18 கோடியை பெறலாம். எதுவாக இருந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் மரியாதை கொடுக்கும் எனலாம்.