சனிப்பெயர்ச்சியால் உருவாகும் மகாபுருஷ யோகம்: இந்த ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி

Saturn Transit in January: புத்தாண்டு துவங்கிய உடனேயே சனி பகவான் பெயர்ச்சியாகிறார். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும் சனிபகவானின் ராசி மாற்றத்தால் புத்தாண்டில் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகப் போகிறது. 

 

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று இரவு 8:02 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். மகர ராசியிலிருந்து அவர் கும்ப ராசியில் பிரவேசிப்பார். இதன் மூலம் கும்ப ராசியில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் உருவாகும். இதனால் பல வித நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /5

மேஷ ராசிக்காரர்கள் ஷஷ் மஹாபுருஷ் ராஜயோகத்தின் பலன் காரணமாக, புத்தாண்டில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

2 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குடும்ப தகராறு தீரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் தொடங்கி வெற்றிகரமாக முடிவடையும். சட்ட விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டு.

3 /5

சஷ யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் சட்ட விவகாரங்கள் தீரும். கூட்டு வேலை பல மடங்கு லாபம் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

4 /5

ஷஷ் மஹாபுருஷ ராஜயோகத்தின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் அமைதியும் வளமும் பெருகும்.

5 /5

மகர ராசிக்கு ஷஷ யோகம் அதிகப்படியான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)