நீங்கள் ஒரு காரை வாங்க திட்டமிட்டிருந்தாலோ, அல்லது வாங்கியிருந்தாலோ, பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் உங்கள் கார் எப்படி இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஆராய வேண்டும்.
கார் வாங்குவது என்பது பெரும்பாலான மக்களின் கனவு. ஆனால் பல முறை மக்கள் கார் வாங்கும்போது பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் ஒரு காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இவற்றை கவனிப்பது மிக அவசியம். இந்தியாவில் மிகவும் பிரபலமான சில கார்கள் பாதுகப்பு அம்சத்தில் கோட்டை விட்டு விடுகின்றன. பல கார்களுக்கு Crash Test Rating-ல் Zero Star கிடைத்துள்ளது.
மாருதி ஆல்டோ 800 நாட்டில் அதிகம் விற்பனையாகும் காராகும். இது சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாதுகாப்பு சோதனையில் பூஜ்ஜிய மதிப்பீட்டைப் பெற்றது. மாருதி, 800 மற்றும் ஆல்டோவுக்குப் பிறகு ஆல்டோ 800 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த காரில் 796 சிசி எஞ்சின் உள்ளது.
நாட்டின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான Renault KWID-ன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஏர்பேக் இல்லாமல் வருகிறது. ஆனால் விபத்து சோதனையில் இது ஒரு டிரைவர் சைட் ஏர்பேக் கொண்டு சோதனை செய்யப்பட்டு ஒன் ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது. பாதுகாப்பு சோதனையில், Renault KWID-க்கு வயது வந்தோர் பாதுகாப்பு பிரிவில் 0, குழந்தைகள் பாதுகாப்பில் 2 மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பில் 1 ஸ்டார் கிடைத்தது. Renault KWID-ல் 0.8 மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
ஹோண்டாவின் மொபிலியோவுக்கும் பாதுகாப்பு சோதனையில் பூஜ்ஜிய மதிப்பீடே கிடைத்தது. இரட்டை ஏர்பேக்குகள் கொண்ட மாடல்களுக்கு வயதுவந்தோர் பாதுகாப்பு பிரிவில் 2 star கிடைத்தது. இது பாதுகாப்பின் அடிப்படையில் மிகவும் குறைவான மதிப்பீடாகும். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் எஞ்சின் கொண்டுள்ளது.
இந்தியாவின் பிரபலமான ஹேட்ச்பேக் காரான Chevrolet Beat-டும் விபத்து சோதனையில் பூஜ்ஜிய மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Chevrolet Beat 2 வகைகளில் வருகிறது. ஆனால் இரண்டிலும் ஏர்பேக் ஆப்ஷன் இல்லை. இந்த கார் 1.2 லிட்டர் டீசல் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டுடன் வருகிறது.
Chevrolet Spark-க்கும் நமது நாட்டில் மிகவும் பிரபலமான கார் ஆகும். ஆனால் பாதுகாப்பைப் பொறுத்தவரை இதுவும் சரியல்ல. ஸ்பார்க் 3 வேரியண்ட்டில் கிடைக்கிறது. ஆனால் நிறுவனம் எந்த வேரியண்டிலும் ஏர்பேக்குகளை வழங்கவில்லை.