ஐபிஎல் 2024: 125 ரன்களுக்கு சுருண்ட மும்பை இந்தியன்ஸ்! ராஜஸ்தான் ராயல்ஸ் அபார பந்துவீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 125 ரன்களுக்கு சுருண்டது.

 

ஐபிஎல் 17வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தை விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை  அணி இப்போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

1 /7

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்ன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா டிரெண்ட் போல்ட் ஓவரில் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். 

2 /7

இதேபோன்று அடுத்த பந்துக்காக மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் தென்னாபிரிக்கா வீரர் டிவால்ட் பிரவீஸ் பவுல்ட் ஓவரில் கோல்டன் டக் ஆனார். 

3 /7

மற்றொரு முனையில் அடிக் கொண்டிருந்த அதிரடி வீரர் இஷான் கிஷனும் பர்கர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.   

4 /7

இதன் அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட ரன்கள் கொஞ்சம் வந்தது. 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஆறு பவுண்டரிகள் சேர்த்து 34 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்துவீச்சு தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.  

5 /7

இதேபோன்று திலக் வர்மாவும் சாஹல் பந்து வீச்சில் அஸ்வினின் அபார கேட்சில் பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 95 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட் இழந்து தடுமாறியது.   

6 /7

அப்போது களத்திற்கு வந்த டீம் டேவிட் ஆவது மும்பையை கௌரவமான இலக்குக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

7 /7

17 ரன்களிலும் ஜெரால்டு கோயிட்சே நான்கு ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தரப்பில் சாகல், போல்ட் தலா 3 விக்கெட்டுகளும், பர்கர் இரண்டு விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.