யமஹா அதன் யமஹா R3 மற்றும் யமஹா MT03 ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இரண்டு பைக்குகளின் வடிவமைப்பு மற்றும் விலை குறித்து இதில் காணலாம்.
Yahama R3: இந்த பைக் CBU வழித்தடத்தில் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக இந்த பைக்கின் விலை அதன் போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளது. இதன் வடிவமைப்பு தற்போதுள்ள நிறுவனத்தின் பைக்குகளைப் போலவே உள்ளது.
இது ஸ்போர்ட்டி எல்இடி ஹெட்லேம்ப்கள் முதல் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வரை அனைத்தையும் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பை ஆதரிக்கிறது. இதில் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் USD ஃபோர்க் உள்ளது.
யமஹாவின் புதிய பைக்கில் 321சிசி பேரலல் ட்வின் லிக்விட் கூல்டு எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 40.4 bhp பவரையும், 29.4 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
இதன் விலை ரூ.4.64 லட்சமாகும். அதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் டெலிவரி 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.
Yamaha MT03: இது ஒரு ஸ்போர்ட்ஸ் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இது USD ஃபோர்க் மற்றும் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனுடன் இருபுறமும் 17 அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது.
பிரேக்கிங்கிற்காக, பைக்கில் ஏபிஎஸ் உடன் ஒற்றை டிஸ்க் பிரேக் உள்ளது. இது தவிர, புதிய பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சக்திவாய்ந்த எக்ஸாஸ்ட் உள்ளது.
இந்த பைக்கில் 321சிசி பேரலல் ட்வின் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இதன் எஞ்சின் 40.4 bhp மற்றும் 29.4 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.4.60 லட்சம் ஆகும்.