Delhi CM Arvind Kejriwal Will Get Bail: உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு ஜாமீன் கிடைத்தது.
Delhi News Today: ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இன்று மிக முக்கியமான நாள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகம்.
உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகம்.
ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதியின் கே.கவிதா ஆகியோருக்குப் பிறகு இந்த வழக்கில் சிறையிலிருந்து வெளியேறும் நான்காவது உயர்மட்டத் தலைவர் கெஜ்ரிவால் ஆவார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை)ஜாமீன் வழங்கியது. சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நீண்ட காலம் சிறையில் இருப்பது "அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாகும்" என்று வலியுறுத்தியது.
ஜூலை 12 அன்று, அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி தலைவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 26 ஆம் தேதி மதுபானக் கொள்கை ஊழல் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் இருந்தபோது சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.