கங்குலி போட்ட கண்டிஷன்.. வேற வழியில்லாமல் ஏத்துக்கிட்ட ரோகித் சர்மா...!

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா அப்போது விரும்பவில்லை என கங்குலி தெரிவித்துள்ளார்.

 

1 /10

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி இருந்தபோது தான் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  

2 /10

கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அதிரடியாக ரோகித் சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டது  

3 /10

20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளில் இந்திய அணி தோற்றதால் விராட் கோலி கேப்டன்ஷிப் மீது விமர்சனம் எழுந்தது  

4 /10

அந்த நேரத்தில் 20 ஓவர் இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பை மட்டும் விராட் கோலி ராஜினாமா செய்ய, பிசிசிஐ அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் இருந்து பறித்தது  

5 /10

இந்த விவகாரம் அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இப்போது ஓபனாக பேசியுள்ளார்.  

6 /10

இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா அப்போது ஏற்க மறுப்பு தெரிவித்ததாக கங்குலி கூறியுள்ளார்.  

7 /10

தன்னுடைய வற்புறுத்தலின் பேரில் அவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.   

8 /10

கேப்டன் பொறுப்பை ஏற்கிறீர்களா? அல்லது உங்களுடைய பெயரை நானே அறிவிக்கட்டுமா? என்று கேட்டேன் என தெரிவித்திருக்கும் கங்குலி, அதன்பிறகு ரோகித் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.  

9 /10

அவரின் கேப்டன்ஷிப் எப்படி இருக்கிறது என இப்போது அனைவரும் கண்கூடாக பார்க்கிறார்கள் என்றும் சவுரவ் கங்குலி பெருமையாக தெரிவித்துள்ளார்.  

10 /10

 ரோகித் தலைமையில் இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் என நம்புவதாகவும் அவர் பேசியுள்ளார்.