ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு நபரின் இயல்பு, நடத்தை, ஆளுமை மற்றும் எதிர்காலம் ஆகியவையும் அவரது ராசியின் இயல்பால் பாதிக்கப்படுகிறது. சில பழக்கங்கள் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கின்றன. பொதுவாக ராசி சம்பந்தமான குணங்களும் தோஷங்களும் அந்த ராசிகளைக் கொண்ட மனிதர்களிடம் காணப்படும். அதிக சந்தேகப்படும் நபர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை / காதலன் / காதலியை அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள். அவர்களது ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக்கோண்டே இருப்பார்கள். யார் அந்த சந்தேகப்பேர்வழி ராசிகள் என இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையில் மிகவும் சந்தேக புத்தி கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென்று சில பணிகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றில் தங்களை மும்முரமாக வைத்திருப்பது நல்லது. இல்லையெனில் அவர்களுக்கு வேலை இல்லாதபோது, சந்தேக புத்தி அவர்களது மனதில் பூந்துகொண்டு அவர்களை ஆட்டிப்படைக்கும். இது அவர்களுக்கும் அவர்களது துணைக்கும் ஆபத்தாகவும் அமையலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கும் தங்கள் துணைக்கும் இடையில் வலுவான, நம்பிக்கையான உறவை வைத்திருக்க விரும்புகிறார்கள். எனினும், இவர்களால் இவ்வாறு செய்ய முடியாமல் போகிறது. இவர்களால், தங்கள் கணவன் / மனைவி / காதலன் / காதலியின் தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை அவ்வப்போது சந்தேக புத்தியுடன் ஆய்வு செய்யாமல் இருக்க முடியாது. எனினும், இவர்கள் தங்கள் துணையை மிக அதிகமாக நேசிக்கிறார்கள். இந்த சந்தேக குணமும் இவர்களது நேசத்தின் ஒரு வெளிப்பாடாகவே உள்ளது.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அவர்களுக்கான இடைவெளியை அளிக்க தவறி விடுகிறார்கள். இவர்களுக்கு ப்ரைவசி என்ற சொல்லே பிடிக்காது என்று கூட சொல்லலாம். அவர்கள் தங்கள் துணையை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். தங்கள் துணை ஒரு சிறிய விஷயத்தை தங்களிடம் கூறவில்லை என்றாலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்காக சண்டையிடத் தொடங்கிவிடுவார்கள். பாசம் இருப்பது நல்லதுதான், ஆனால் அதுவே பாரமாகிவிடக் கூடாது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)