Yogibabu: நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமான யோகிபாபு தற்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்.
பல முக்கிய ஹீரோ படங்கள் யோகிபாபு இல்லாமல் இல்லை என்ற அளவுக்கு அவர் வளர்த்துள்ளார். விஜய், ரஜினி என இவர்களது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு ஜெய்லர், மாவீரன் போன்ற படங்களில் யோகி பாபுவின் நகைச்சுவை பரவலாக பேசப்பட்டது. தற்போது தளபதி 68, அயலான், அரண்மனை 2 படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் யோகி பாபு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
யோகி பாபு மற்றும் மஞ்சுவிற்கு மகனும், மகளும் உள்ளனர். கடந்த மாதம் யோகி பாபு தனது மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். தமிழ் சினிமாவில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்தனர்.
யோகிபாபு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி உள்ளது.