ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவிற்கு வளைகாப்பு! புடவையில் ‘இந்த’ டிசைனை பாத்தீங்களா?

Actor Robo Shankar Daughter Indraja Shankar Baby Shower Photos : பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதையடுத்து, இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actor Robo Shankar Daughter Indraja Shankar Baby Shower Photos : பிரபல நகைச்சுவை நடிகரும், சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பிரபலமுமான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்து அறிமுகமானார். இதையடுத்து, அதிதி ஷங்கருடன் ‘விருமன்’ படத்தில் தோழியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து, இவருக்கு தனது சொந்த தாய் மாமாவுடன் திருமணம் நடந்தது. சமீபத்தில் கர்ப்பம் தரித்த விஷயத்தையும் ஊடகங்களில் தெரிவித்தார். இவருக்கு 5ஆம் வளைகாப்பு நடந்திருக்கிறது. இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 

1 /8

அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர், இப்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். இவருக்கு இருக்கும் மகள்தான், இந்திரஜா ஷங்கர். 

2 /8

இந்திரஜா, முதலில் நடித்த படம் பிகில். இதில் விஜய்யுடன் நடித்த இவர் அடுத்து கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்தார். 

3 /8

இந்திரஜாவிற்கும் அவரது தாய் மாமன் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதையடுத்து, இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

4 /8

இந்திரஜாவும் கார்த்திக்கும் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், இந்திராஜா கர்ப்பமாக இருக்கும் செய்தியை இருவரும் சேர்ந்து அறிவித்தனர். 

5 /8

இந்திரஜாவிற்கு தற்போது 5ஆம் மாதம் பூமுடித்துள்ளனர். இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். 

6 /8

இந்திரஜாவின் புடவையில் இவர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது. 

7 /8

இந்திரஜா, தனது ப்ளவுஸ் மற்றும் ஜடையில் சில டிசைன்களை செய்திருக்கிறார். பிளவுஸின் முதுகு பக்கத்தில் கார்த்திக் மற்றும் இந்திரஜாவின் பெயரை குறிப்பிடும் வகையில் KI என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது

8 /8

இந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.