கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ஓட்டலில் அறை ஒதுக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.
கேரளாவை சேர்ந்தவர் ஷபீக் சுபைதா ஹக்கீம் மற்றும் அவரது மனைவி திவ்யா. ஹக்கீம் தனது பணி தொடர்பாகவும் அவரது மனைவி திவ்யா சட்ட பல்கலையில் பி.எச்டி தேர்வில் பங்கேற்கவும் பெங்களூரு வந்தனர்.
அவர்கள் சுதமா நகர் அனிபுரம் மெயின் சாலையில் உள்ள ஆலிவ் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்று அறை கேட்டுள்ளனர்.
ஆனால், ஊழியர் இந்துவும், முஸ்லிமும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது எனக்கூறி அறை ஒதுக்க மறுத்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் அருகில் உள்ள வேறு ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினர்.
இது குறித்து ஹக்கீம் கூறுயது:-
ஓட்டல் ஊழியரின் பதில் அதிர்ச்சியாக உள்ளது. முன்னர், இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் சந்தித்தது கிடையாது. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அறை ஒதுக்குவதில்லை என்பது தங்களது கொள்கை முடிவு என ஓட்டல் நிர்வாகம் கூறியது.
இது குறித்து ஆவணங்களை கேட்டதற்கு, அவர்கள் எதையும் காட்ட மறுத்துவிட்டனர்.
இவ்வாறு கூறினார்.