இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்
2022ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடரின் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இத்தொடரின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது. கதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள இத்தொடர் நாளை (பிப்.28) அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் உருவாகி உள்ள காமெடி வெப் சிரீயஸ் love under construction. புது வீடு கட்டும் கனவை நினைவாகும் இளைஞர் எதிர்கொள்ளும் சிக்களே இத்தொடரின் கதைகளம். இத்தொடர் நாளை (பிப்.28) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.
நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி தெலுங்கில் வெளியான திரைப்படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் 200 ரூபாய் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசுவாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி திரையரங்கில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் நாளை (பிப்.28) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த பிப்.06ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வரும் மார்ச் 03ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் ஆகியோர் நடிப்பில் திரையரங்கில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி வெளியான திரைப்படம் பராரி. இப்படம் நாளை (பிப்.28) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.