சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
தான் கூறிய கருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜி.ராமகிருஷ்ணனுக்கு தனது கண்டத்தை பதிவு செய்துள்ளார்.
காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த 23-10-2017 அன்று விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 113-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27-09-2017) புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று 5 மணிக்கு மழலையர் பாசறை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சி அறிவிப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனதால் அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் த தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டனர்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி மக்கள் திரள் போராட்டத்தில் அம்பத்தூர், ஆவடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீடியோவை பார்க்கவும்:-
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில், கடந்த இரண்டு நாட்களாக ஆபாச வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் ஆண் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற வதந்தியும் பரவி வருகிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
சீமான் தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்வாகத்தை நடத்தி செல்லவும், விவசாயத்தையும், ஏழைகளை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் “துளி திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து
உங்களால் முடிந்த நிதியுதவி அளிக்கமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்க்க வீடியோ:-
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நாம் தமிழர் கட்சி தலைமையில் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது. அந்த ஆவணங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
உள்ளாட்சித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பொதுக்குழுக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.