மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இன்று முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகிள்ளது.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க இருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட உள்ளதாம்.
ஹைதராபாதில் நடைபெறவுள்ள டிஜிபி மாநாட்டில், பிரதமர் மோடியும் இன்று பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து மாநில காவல் துறை தலைவர்களின் (டிஜிபி) வருடாந்திர மாநாடு, ஹைதராபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாதெமியில் இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைக்கிறார். அவருடன் உள்துறை இணையமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
பயங்கரவாதம் உலகிற்கே சவாலாக உள்ளது. இதற்கு எல்லை கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லின். அவர் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது சூரிய சக்தி தொடர்பாகவும் இஸ்ரேல் - இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகின. நீர்மேலாண்மை தொடர்பாக இஸ்ரேல் - இந்தியா தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட்டது. பிறகு இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியபின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லின். அவர் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது சூரிய சக்தி தொடர்பாகவும் இஸ்ரேல் - இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகின. நீர்மேலாண்மை தொடர்பாக இஸ்ரேல் - இந்தியா தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட்டது. பிறகு இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியபின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு பின்னல் ஒரு நபர் உள்ளதாக தகவல் வந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்த அகவிலைப்படி உயர்வு இந்த வருட ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் நடைபெற உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்திக்கின்றன. இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும்
அதிநவீன எஸ்-400 ட்ரையும்ப் ஏவுகணையை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து இருந்தது. 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கையெழுத்து ஆக உள்ளது எனத்தெரிகிறது..
காவிரி விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு நகரில் நேற்று போராட்டக்காரர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை சம்பவங்கள் கட்டுக்கு அடங்காமல் போனதால் பெங்களூரு மற்றும் மைசூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் எனும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்தரா மோடி சென்றுள்ளார். இம்மாநாடு லாவோஸ் நாட்டில் நடக்கிறது.
அப்போது அவர் பேசியதாவது:- நல்லிணக்கம் மூலம் இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் எங்களின் நட்பு அமைந்துள்ளது. இந்த முக்கியமான நட்புறவு என்பது பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஐந்து வருடத்திற்க்கான ஆசியான் திட்டத்தின் கீழ் இந்தியா 54 செயல்பாடுகள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது.
சாமானியனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
இந்திய சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார்.இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் ரேடியோ வாயிலாக மக்களுடன் பேசி வரும் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக பொது மக்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.
டில்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொது மக்களின் கருத்துக்கள், அரசின் செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பொது மக்களிடம் மோடி கேட்டறிய உள்ளார்.
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானி மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். காஷ்மீர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் என்பது இது 2-வது முறையாகும். மேலும் இன்றயை மாற்றத்தில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.