இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயனர்களின் தேவைக்கேற்ப அனைத்து வகையான தொலைபேசிகளையும் அறிமுகப்படுத்துகின்றன. சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களையும் குறைந்த விலையில் இப்போது பெற முடிகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமரா, சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் பெரிய ஸ்டோரேஜ் என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றன. இத்தகைய வசதிகளைக் கொண்டுள்ள தொலைபேசிகளை வாங்க நீங்கள் அதிக பணமும் செலவழிக்க வேண்டியிருப்பதில்லை.
சாம்சங், ரியல்மே மற்றும் ரெட்மி போன்ற நிறுவனங்களில் 8 ஆயிரம் ரூபாயிலிருந்தே சிறந்த தொலைபேசிகளைப் பெற முடியும். இந்த விலை மற்ற ஸ்மார்ட்ஃபோங்களின் விலையைப் பார்க்கும்போது மிகக் குறைவானது.
சிறப்பு என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பவர்பேக் செயல்திறனையும் பெற முடிகிறது. 8 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக சிறப்பான அம்சங்களுடன் வரும் ஸ்மார்ட்போன்கள் பற்றி இன்று காணலாம்.
Realme C11- ரியல்மியின் இந்த தொலைபேசியில் 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே, 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக இந்த தொலைபேசியில் 13MP + 2MP இரட்டை (Dual) பின்புற கேமரா கிடைக்கிறது. 5MP முன்பக்க செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் 5000 mAh சக்திவாய்ந்த பேட்டரி உள்ளது. இந்த தொலைபேசியின் விலை ரூ .7,499. நீங்கள் Realme C1-ஐ ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாங்கலாம்.
ALSO READ: Xiaomi கொண்டு வரும் அசத்தல் சார்ஜர்; ஸ்மார்ட்போன் 10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும்!
Samsung Galaxy M01- இந்த தொலைபேசியை ரூ .7,999 க்கு வாங்கலாம். இந்த குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உள்ளது. தொலைபேசியில் 13MP + 2MP பின்பக்க (Back) கேமரா மற்றும் 5MP முன்பக்க (Front) செல்பி கேமரா கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, இது ஒரு நல்ல தொலைபேசியாகும். இது 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைகளைத் தவிர, பிளிப்கார்ட் மற்றும் அமேசானிலிருந்தும் இந்த தொலைபேசியை வாங்கலாம்.
Redmi9A- ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் HD + டிஸ்ப்ளே, 3GB, 13MP பின்புற கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உள்ளது. தொலைபேசியில் 5000mAh பேட்டரி உள்ளது. நீங்கள் விரும்பினால், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஃபோனின் மெமரியை 512GB வரை அதிகரிக்கலாம்.
POCO C3- இது ஒரு மிகச்சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படுகின்றது. நீங்கள் POCO C3-ஐ எந்தவொரு ஆன்லைன் அல்லது இ-காமர்ஸ் தளத்திலிருந்தும் ரூ .7,999 க்கு வாங்கலாம். இந்த தொலைபேசியில் 6.53 இன்ச் HD + டிஸ்ப்ளே உள்ளது. இதில் நீங்கள் 13MP + 2MP + 2MP டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். 5MP முன்பக்க செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியை வலிமையாக்க, 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
TECNO Spark 6 Air- 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) 7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. தொலைபேசியின் கேமராவைப் பற்றி பேசுகையில், இது 13MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, இந்த தொலைபேசி மிகவும் நேர்த்தியானதாக உள்ளது. இது 6000 mAh பேட்டரியின் சப்போர்டைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியை இ-காமர்ஸ் தளங்களிலிருந்து ரூ .7,699 க்கு வாங்கலாம்.
ALSO READ: Big News: 5G சேவையின் ரோட்மேப்பை தயார் செய்தது Airtel, இந்த நகரங்களில் முதலில் கிடைக்கும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR