Weather Update In Tamil Nadu: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 27, வியாழக்கிழமை) பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் தீவு பகுதி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே எந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதைக் குறித்து பார்ப்போம்.
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும்
தமிழகத்தில் இன்று ஒன்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியிலும், தென்தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பிப்ரவரி 27 ஆம் தேதி மழை பெய்யும்
அதன்படி பிப்ரவரி 27 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள பல்வேறு இடங்கள் கனமழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு சில இடங்களிலே கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பொழிவிற்கு வாய்ய்புள்ளது.
மதுரை மாவட்டத்தில் பெய்த மழை
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி பகுதிகளான கோரிப்பாளையம், ஆரப்பாளையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் மதுரையில் உள்ள பிரதான சாலைகளான வைகையாற்று கரையோர சாலை, கோரிப்பாளையம் சாலை, சிம்மக்கல் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சட்டென மாறிய வானிலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் இதமான காற்றுடன் மிதமான மழை பெய்தது. சட்டென மாறிய வானிலையால் காரைக்குடி மக்கள் குதுகலம் அடைந்தனர்.
திடீரென பெய்த மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடாணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல ராமேஸ்வரத்தில் குழுகுளு சூழல் நிலவியது. ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் இதமான சூழல் காணப்பட்டது.
ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
இந்நிலையில் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும் நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு
மேலும் சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களிலும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் ஒன்றாம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை பெய்யுமா?
சென்னையை பொறுத்தவரை வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - குழந்தை பிறக்க வாய்ப்பில்லை ஆனா 20 குழந்தைகள் பெற்ற தம்பதி
மேலும் படிக்க - போலீசே இப்படியா? 24 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ