Seeman Latest News Updates: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று (பிப். 27) நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார்.
Seeman News: 'நாளை மறுநாள் வருவேன்... நாளை வர முடியாது'
அப்போது அவரிடம், நீலாங்கரை இல்லத்தில் சம்மன் நோட்டிஸ் ஒட்டிய விவகாரத்தில் காவலாளி கைது குறித்த கேள்விக்கு,"என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுவரை அரசு எதில் இவ்வளவு தீவிரம் காட்டி உள்ளது. சம்மன் ஒட்டியதை என் தம்பி கிளித்துள்ளார். நான் கிருஷ்ணகிரியில் இருக்கும்போது எதற்கு நீலாங்கரை இல்லத்தில் சம்மன் ஒட்டுகிறார்கள்...?.
நான் ஏற்கனவே விசாரணைக்கு வந்தவன்தானே, நாளை மறுநாள் வருவேன் என்றேன். நாளையே வர வேண்டுமென்றால், வர முடியாது. அந்த பெண்ணையும், என்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். மீண்டும் விசாரித்தால் அதை தான் கூறுவேன்.
Seeman News: அதிமுக ஆட்சியில் விஜயலட்சுமி ஏன் வரவில்லை?
விசாரிக்காமலேயே இதுதான் நடந்தது என்கிறீர்கள்... இதற்கு அஞ்சி பயந்து ஓடுபவன் அல்ல, வருவேன். நாளை வர முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். திமுக ஆட்சி நேரத்தில் இந்தம்மா (நடிகை விஜயலட்சுமி) வரும். அம்மையார் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் 10 ஆண்டு ஆட்சியில் ஏன் வரவில்லை. தேர்தல் வந்தால் வருவார், என்னை சமாளிக்க முடியாததால் இந்தம்மாவை கூட்டி வந்து நிறுத்துகிறார்கள்.
பெரியார் வாங்கிய அடியில் என்ன செய்வது என தெரியாமல் இந்தம்மாவை அழைத்து வருகிறார்கள். விசாரித்து தானே தீர்ப்பு எழுத வேண்டும், விசாரணைக்கு முன்பே எழுதினால் எப்படி...?. விசாரிக்க வேண்டும், விசாரணையில் குற்றச்சாட்டிற்கான சான்றை கேட்க வேண்டும், சான்று படி நிரூபித்து குற்றம் குறித்து சொல்ல வேண்டும். இந்த நாடகத்தை பார்க்கதான் போறேன்" என்றார்.
Seeman News: சீமானுக்கு 2வது முறையாக சம்மன்... ஏன்?
நாளை ஆஜராவீர்களா என்கிற கேள்விக்கு, "நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் இருக்கிறது. வளசரவாக்கம் காவல் நிலையம் அங்கேயே தானே இருக்கும். நான் இங்கே தானே இருப்பேன். வந்தே தீர வேண்டுமென்றால்... வர முடியாது" என பேசினார்.
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டு, பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சீமானின் மனுவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிப்பதற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் இன்று (பிப். 27) ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியின் கூட்டம் ஒன்றுக்காக கிருஷ்ணகிரி சென்றுள்ளதால் இன்று ஆஜராக இயலாது என்றும், சீமான் ஆஜராக நான்கு வாரங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சீமான் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
Seeman News: போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி கயல்விழி - ஏன்?
ஆனால், இந்த கோரிக்கையை மறுத்த காவல்துறையினர், சீமான் நாளை (பிப். 28) காலை 11 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் 2வது முறையாக சம்மன் அளித்தனர். குறிப்பாக, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் அந்த சம்மனை போலீசார் ஒட்டினர். போலீசார் சம்மனை ஒட்டியதும் அதனை சீமான் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒருவர் கிழித்தெறிந்தார். இதனால், போலீசாருடன் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சீமான் வீட்டின் காவலாளியாக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் என்பவர் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனே சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காவலாளியின் செயலுக்காக போலீசாரிடம் சீமான் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
Seeman News: சீமான் வீட்டு காவலாளி மீது வழக்குப்பதிவு
தற்போது அமல்ராஜிடம் இருந்து துப்பாக்கியுடன் 20 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அமல்ராஜ் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். தற்போது அவர் மீது துப்பாக்கி காட்டி மிரட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க இருக்கிறார்கள்.
மேலும் படிக்க | சினிமா புகழ் மட்டும் போதாது! மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!
மேலும் படிக்க | TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!
மேலும் படிக்க | வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ