இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும், நாளையும் அதிக மழை இருக்கும் என்று எச்சரித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா போன்ற இடங்களில் கனமழைக்கு எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும், கூடுதலாக ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, ஏனாம், ராயலசீமா மற்றும் தெற்கு கர்நாடகாவின் கடலோர பகுதிகளிலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும். நாளை மறுநாள் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி பயணிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கனமழை எச்சரிக்கை! இன்று இந்த மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 11 ஆம் தேதி இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை போன்ற சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் போன்ற பிற பகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும்.
டிசம்பர் 12 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் மழை பெய்யும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் டிசம்பர் 11 முதல் 13ம் தேதி வரை கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விரைவில் தென்னிந்தியாவில் பல இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை தொடர்பான முக்கிய தகவல்கள்:
- இன்று முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் டிசம்பர் 13 வரை மழை பெய்யும். மேலும் டிசம்பர் 16 ஆம் தேதி அதிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
- அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் டிசம்பர் 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், டிசம்பர் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசான மழையும், கேரளாவில் டிசம்பர் 11 முதல் 13 வரை அதிக மழை பெய்யக்கூடும்.
- கடலோர ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமாவில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் தெற்கு கர்நாடகாவில் டிசம்பர் 13 ஆம் தேதி ஓரளவு மழை பெய்யக்கூடும்.
- கடலோர ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமாவில், கனமழை பெய்யும். டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சில இடங்களில் மழை பெய்யும்.
- கேரளா மற்றும் மாஹே டிசம்பர் 12, 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையை பெய்யக்கூடும். தெற்கு கர்நாடகாவில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் கடலோர கர்நாடகாவில் டிசம்பர் 13 ஆம் தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய் என்ன வாழும் அம்பேத்கரா? அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர் - திமுக அமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ