சினிமா புகழ் மட்டும் போதாது! மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!

கலைஞர் ஜெயலலிதா களத்தில் இல்லை என்பதால் சினிமா புகழ் மூலாதாரத்தை மட்டுமே கொண்டு எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியும் என சிலர் நினைப்பதாக மறைமுகமாக விஜயை விமர்சித்த திருமாவளவன்.

Written by - RK Spark | Last Updated : Feb 27, 2025, 11:53 AM IST
  • முன்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் ஏற்கமாட்டோம்.
  • இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டங்களில் ஒன்று.
  • அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
சினிமா புகழ் மட்டும் போதாது! மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! title=

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னதாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். திருவண்ணாமலை அடுத்த கெங்கவரம் பகுதியைச் சேர்ந்த விசிக தொண்டர் பாஸ்கர் காவியா தம்பதியினரின் குழந்தைக்கு தமிழ் முதல்வன் என்று பெயர் சூட்டினார். அதன் பிறகு பேசிய திருமாவளவன், மும்மொழிக் கொள்கையை ஒன்றிய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், இந்தி அல்லாத பிற மொழி பேசும் மாநிலங்களில் இரு மொழிக்கொள்கை உள்ளதாகவும் இந்தியை திணிக்க மாட்டோம் என மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு திட்டவட்டமாக தெரிவித்ததை சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் படிங்க: வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?

ஆனால் தற்பொழுது ஆளும் மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது என்று கூறிய அவர் இது இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒன்று என்றார். பாஜக அரசின் நோக்கம் என்பது ஒரே நாடு ஒரே மொழி என்ற இலக்கு தான் என்றும், இந்தியாவில் எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் என்றும், ஆர் எஸ் எஸ் இன் செயல் திட்டங்களில் ஒன்றான மும்மொழி கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்றார், மும்மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் வேண்டாம் என்பது தான் எங்களது நோக்கம் என்றும், தனிநபர் இந்தி கற்றுக்கொள்வது தாங்கள் தடை செய்யவில்லை என்றும் விளக்கி பேசினார், தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு கூறுவது மிரட்டல் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினார்.

பி எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார், வருகின்ற மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் பதிவு செய்த அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மறு வரையறை குறித்து கலந்தாய்வு  செய்ய உள்ளார் என்றும், தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கு இதனால் பாதிப்பு நேரும் என்றும், ஆகையால் இந்தக்கூட்டம் மிகவும் இன்றியமையாதது தமிழ்நாடு முதல்வரின் இந்த முன்னெடுப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது என்றார். தொடர்ந்து பேசியவர் தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்தால் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே இருக்கும் என்றும் இது மிகவும் ஆபத்தானது என்றார்.

விஜய் குறித்த கேள்வி

விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் முதல் தேர்தலை சந்திக்கட்டும் மக்கள் அவரை அங்கீகரிப்பது குறித்து பார்த்த பிறகு முடிவு எடுக்க முடியும் என்றும், ஒவ்வொரு தேர்தல் காலகட்டத்திலும் புதிய புதிய வரவுகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் அவர்களால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லை என்றார். தற்போதுள்ள சூழ்நிலையில் கலைஞர் ஜெயலலிதா ஆகியோர் களத்தில் இல்லை என்பதால் அந்த கணக்கை மட்டுமே வைத்து திமுக அதிமுக ஆகிய கட்சிகளை பலவீனப்படுத்திவிடலாம் என நினைப்பதாகவும், தமிழ்நாட்டில் திமுக அதிமுகவை தாண்டி முற்போக்கு ஜனநாயக சக்திகள் சமூக நீதி அரசியல் கட்சிகள் பல்வேறு கொள்கைகளை பரப்பும் கட்சிகள் உள்ளதாகவும், ஆனால் தற்பொழுது வெறும் சினிமா புகழ் போன்றவற்றை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியும் என்று சொல்லி விட முடியாது என்றார், தமிழ்நாட்டு மக்களையும் புதிய இளைஞர்களையும் ஏமாற்றி விடவும் ஏய்த்து விடவும் முடியாது என்றார்.

இன்று தவெக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் இது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்றார், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முன்மொழிக் கொள்கை மறுக்கப்படுவது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்து முதல்வர் ஏன் பதிலளிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கொள்கை பூர்வமான கேள்வி இது இல்லை என்றும் குதர்க்கமான கேள்வி என்று கூறியவர், இந்தி என்பது உலகத்தில் இல்லாத மொழியா? பெரிய மொழியா என்று கேள்வி எழுப்பிய அவர் இந்தியை படித்தால் உலகத்தில் எங்கும் பணி புரியலாமா அப்படி என்றால் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டிற்கு பணி வேண்டி வருவதற்கு அவசியம் என்ன என்றும், இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் மூன்றாவது மொழியாக என்ன படிக்கிறார்கள்? தாய்மொழியாக இந்தியை கொண்டவர்கள் மூன்றாவது மொழியாக தமிழைப் படிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா என பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே மொழியா தேசிய மொழியா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிங்க: TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News