மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கடந்த 5 ஆம் தேதி 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை 10 மணி அளவில் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபொழுது 10-45 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே டிடிவி தினகரன் தூண்டுதலின்பேரில் அமமுக அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களைக்காட்டிலும் செருப்பை கார் மீது வீசியும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் தொடர்பாக மாறன் என்பவர் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.
ALSO | DMK பிரமுகரை ஆள் வைத்து கொன்ற மகள் கைது
அந்த புகாரில் கட்டைகளாலும், செருப்பாலும் மயிலாப்பூர் அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன் என்ற தன் மீதும், செங்கல்பட்டு மேற்கு எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜப்பா மீதும் பட்டு காயம் ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 294(b),148, 323, 506(2) கொலை மிரட்டல், வாகனத்தை தாக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமமுக 114 வது வட்டம் அமமுக பொருளாளர் மாரி வயது 32 என்பவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனையடுத்து சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அமமுக 114 வது வட்ட செயலாளர் அழகர்சாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமமுகவினர் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை அமமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், 63 வது வட்ட பொருளாளர் சுதாகர் மற்றும் மதுசூதன், அற்புதராஜ், உள்ளிட்ட பேருக்கு 41A சம்மன் அனுப்பி உள்ளனர். 12ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன், ஆஜராவில்லை என்றால் கைது செய்யப்படுவார்கள் என அண்ணா சதுக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இன்னும் சிலரை வீடியோ காட்சிகளை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | வால்பாறையில் உடல்நலக் குறைவால் குட்டி யானை உயிரிழப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR