Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் விளையாடி வரும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. இரண்டு குரூப்பில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளே அரை இறுதிக்கு முன்னேறும்.
அந்த வகையில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி அடைந்துள்ளது. மூன்றாவது போட்டியாக நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 02) மோத உள்ளன. நியூசிலாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதி அடைந்துள்ளது. இருப்பினும் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருக்கும் சில அசெளகரியங்கள் ஏற்பட்டு உள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் நன்றாக இருப்பதாக கூறியிருந்தார். இச்சூழலில் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடாமல் பார்வையாளராகவே இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிங்க: IND vs NZ: ரோகித் சர்மா வெளியே? அவருக்கு பதில் யார்? பிளேயிங் 11 இங்கே!
ஒரு வேளை இதன் காரணமாக ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார். இந்த நிலையில், அவருக்கும் உடல் நலம் சரியில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் இடையே பெரும் கவலையை அதிகரித்து உள்ளது.
இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது, துணை கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர் மைதானத்திற்கே வரவில்லை என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு
இதற்கிடையில் பாகிஸ்தான் போட்டியின் போது ரிஷப் பண்டிற்கு உடல் நிலம் சரி இல்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் தற்போது அதில் இருந்து குணமடைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் வலைப்பயிற்சியில் ஈடுபடாதது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தினாலும் ரிஷப் பண்ட் குணமடைந்து பயிற்சியில் ஈடுபடுவது அவர்களுக்கு ஆறுதலாக உள்ளது. மேலும், முகமது ஷமிக்கு கணுக்காலில் வலி ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரை இறுதியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றன.
மேலும் படிங்க: ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! பிசிசிஐ புதிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ