இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமித்தது. இது குறித்த தனது கருத்தை, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிடை நியமித்ததை வரவேற்ற ரோஹித் ஷர்மா, டிராவிட்டிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெற இந்திய வீரர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
"நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்தோம், அதனால் இந்த நியமனம் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. ராகுல் டிராவிட் இந்திய அணியில், வேறு பொறுப்பில் மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள், அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று ரோஹித் கூறினார்.
ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிந்ததால், தற்போது டிராவிட் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read | விராட் கோலியுடன் அரட்டையடிக்க விரும்பும் ஸ்காட்லாந்து கிரிக்கெட்டர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஏற்கக் கோரிய கோரிக்கையை ஏற்காமல் இருந்த டிராவிடை சமாதானப்படுத்துவதில் பிசிசிஐயின் உயர்மட்ட அதிகாரிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அணியின் தலைமை பயிற்சியாளர் நியமனம் வெளியிடப்பட்டது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் (National Cricket Academy) தலைவராக பணியாற்றிய முன்னாள் இந்திய கேப்டன், 2023ல் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுவார்.
நவம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டித்தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்க உள்ளார்.
"டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் உறுதியான கிரிக்கெட்டர், எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கும்" என்று ரோஹித் கூறினார்.
Read Also | 66 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR