சனி நட்சத்திர பெயர்ச்சி 2023: சனி கிரகத்தின் ராசி மாற்றம் மட்டுமல்லாமல் நட்சத்திர மாற்றமும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இது தவிர இவற்றின் இயக்கங்கள், அஸ்தமன மற்றும் உதயமாகும் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் இவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
சனி ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சமீபத்தில் பெயர்ச்சியானார். இந்த நட்சத்திரத்தில் அவர் அக்டோபர் 17 வரை இருக்கிறார். சனியின் இந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம்
ஜோதிட சாஸ்திரப்படி, சனிபகவான் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சியாவது கடக ராசிக்காரர்களுக்கு பல தொல்லைகளை உண்டாக்கப் போகிறது. இப்போது சனியின் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பொருளாதார நிலையில் தாக்கம் காணப்படும். இதன் காரணமாக மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளும் ஏற்படும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! 2025 மார்ச் வரை சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகும் ‘ராசி’ இது தான்!
கன்னி
சனியின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்விலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுங்கள். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வீடு, மனை வாங்க நினைத்தால் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
இந்த காலகட்டத்தில், விருச்சிக ராசிக்காரர்கள் நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ரத்தம் சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால், அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் அதிக அளவு கவனம் தேவை. உறவுகளில் நல்லிணக்கத்தைப் பேணுங்கள், சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் வரையிலான காலம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பல சமயங்களில் சரியான முடிவு எடுக்க முடியாத நிலை வரக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். மருந்துகள் மற்றும் நோய்களுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். அதன் விளைவு உங்கள் வாழ்க்கையில் காணப்படும். செய்து கொண்டிருந்த வேலை தடைபடும்.
மீனம்
சனியின் ராசி மாற்றம் மீன ராசிக்காரர்களுக்கு அத்தனை சாதகமாக இருக்காது. தற்போது மீன ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் வரை இவர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொருளாதார விஷயங்களில், இந்த காலம் சிக்கலானதாக இருக்கும். பல தேவையற்ற செலவுகள் வீட்டின் நிதிநிலையை சவாலாக்கும். மனைவியுடன் உறவில் கசப்பு ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மார்ச் 28 குரு அஸ்தமனம்: இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ