சனி நட்சத்திர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் மார்ச் 15 புதன்கிழமை சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். அக்டோபர் 17 வரை சனி இந்த நக்ஷத்திரத்தில் இருப்பார். பொதுவாக சனி பகவானின் அனைத்து மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். எனினும், 6 ராசிக்காரர்களின் வாழ்வில் இதனால் அபரிமிதமான அதிர்ஷ்டம் ஒளிரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
இந்த ஆறு ராசிக்காரர்களும் அடுத்த ஏழு மாதங்களுக்கு பொருளாதார வளர்ச்சியை அனுபவிப்பார்கள். சனி ராகு நட்சத்திரத்தில் நுழைந்தவுடன் இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் எப்படி பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு இது சாதகமான காலமாக இருக்கும். ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் பண பலன்களை தரும். சனி பகவானின் ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
வெளிநாட்டில் படிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும் என்று கனவு காணும் மிதுன ராசிக்காரர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சனியால் சில சவால்களை சந்திக்க நேரிட்டாலும் கடின உழைப்பால் அவற்றை வெற்றிகொள்ளலாம். உங்கள் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | Weekly Horoscope: கடந்த ஒரு வருட வேலையின் பரிசு... இந்த வாரத்தில் தெரியும்!
சிம்மம்
சதய நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைவது தொழில் வெற்றி, வேலை மாற்றம் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் சனியின் நட்சத்திர மாற்றத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். செல்வம் மற்றும் சொத்து சம்பந்தமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
துலாம்
ராகுவின் நட்சத்திரத்தில் சனியின் பிரவேசம் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் சுப பலன்களைத் தரும். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சாதகமாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் நிதிப் பலன்களைப் பெறுவார்கள். வருமான ஆதாரங்களும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், பணம் சம்பாதிப்பதற்காக எந்த ஒரு குறுக்குவழியையும் பின்பற்ற வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய வேலை கிடைப்பதிலும் வெற்றி பெறலாம். இந்த காலகட்டம் தொழில் வல்லுநர்களுக்கு சாதகமான முடிவுகளையும் நல்ல நிதி ஆதாயங்களையும் கொண்டு வரும்.
மகரம்
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்களின் தொழில், வியாபாரம் விரிவடையும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்ட வேலை, வியாபாரம் நீண்ட கால பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வக்ரமடையும் ராகு-கேது! நெருக்கடி என்னும் சக்ரவியூகத்தில் சிக்கும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ