வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணங்கள் தொடர்பான பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நாம் பார்த்து அதிசயிக்கும் வண்ணம் உள்ளன. இப்படி கூட நடக்குமா என சில வீடியோக்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
திருமணங்களில் வரதட்சனை கேட்பதும் கொடுப்பதும் குற்றம் என பல விதிகள் இருந்தாலும், சட்டங்கள் இருந்தாலும், இன்னும் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. முன்பு இருந்த அளவு தற்போது வரதட்சணை கொடுமைகள் நடப்பதில்லை என்று தோன்றினாலும், அவ்வப்போது நாம் கேள்விப்படும் சில சம்பவங்கள் நம் எண்ணங்களை மாற்றி விடுகின்றன. சமீபத்தில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு நேர்ந்த நிலை பற்றிய ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் உடனடியாக மணமகளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார் என்பதை காண முடிகின்றது. திருமணத்திற்குப் பிறகு தனக்கு வரதட்சணையாக பைக் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மணப்பெண்ணை அழைத்துச் செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார். இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.
பிலிம் காட்டிய மாப்பிள்ளை
வீடியோவை பார்த்தால் திருமணம் நடந்துமுடிந்து விட்டது போல தெரிகிறது. இதில் மணப்பெண்ணை மணமகனுடன் அவர்களது வீட்டிற்கு அனுப்ப பெண் வீட்டார் ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால், அப்போது மணமகன் ஒரு குண்டை தூக்கி போடுகிறார். மணமகளை தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், அதற்கு வரதட்சணையாக தனக்கு ஒரு பைக் கொடுக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
மேலும் படிக்க | நீயா...நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய எருமைகள்
மணமகள் வீட்டார் மணமகனிடம் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து அசைவதாக இல்லை. ஆனால், அதற்கு பின் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் முன்பே அறிந்திருந்தால், இத்தனை அடம் பிடித்திருக்க மாட்டார்.
அருகில் நின்றிருந்த மணப்பென்ணின் தந்தைக்கு மாப்பிள்ளையின் செயலால் பயங்கர கோபம் வந்தது. யாரும் செய்யத் துணியாத செயல் ஒன்றை அவர் செய்தார்.
மணமகனை அடித்த மாமனார்
வரதட்சனை கேட்டு மணமகன் செய்த அட்டகாசத்தை பெண்ணின் தந்தையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் தனது செருப்பைக் கழற்றி மாப்பிள்ளையை அடிக்க ஆரம்பிக்கிறார், இதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது. அவர் அடித்த அடியில் மணமகன் திக்குமுக்காடிப் போனார். அவருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மாமனாரின் அடியால், அந்த மாப்பிள்ளைக்கு பைக்கின் மீது இருந்த ஆசை முற்றிலும் தீர்ந்திருக்கும். மணமகனின் கண்களிலிருந்து கண்ணீர் கூட வருவதை வீடியோவில் காண முடிகின்றது. தன்னை விட்டுவிடுமாறு அந்த மாப்பிள்ளை தன் மாமனாரிடம் கெஞ்சத் தொடங்குகிறார்.
மணமகனை அடித்த மாமனாரின் வீடியோவை இங்கே காணலாம்:
Kalesh B/w Father-in Law and Groom to be Over Bike in Dowrypic.twitter.com/UE38A7fYO2
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 8, 2023
மாமனாரிடம் சரியான பாடம் கற்ற பிறகு மாப்பிள்ளைக்கு தன் தவறு புரிந்தது. தன் தவறை உணர்ந்து மாப்பிள்ளை அழுவதை வீடியோவில் காண முடிகின்றது. மாப்பிள்ளைக்கு பிடித்திருந்த வரதட்சணை பேய் மாமனாரின் அடியால் விரட்டப்பட்ட பிறகு, மணமகன் மணமகளை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். வித்தியாசமான இந்த திருமண வீடியொ ட்விட்டரில் @gharkekalesh என்ற பக்கத்தில் பகிரப்படுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மாமனார் ஒவ்வொரு மணமகனுக்கும் தேவை என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | கன்பியூஸ் ஆகி மாப்பிள்ளை செய்த வேலை: ஷாக்கில் மணமகள், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ