பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

Photos Of TVK 2nd Year Anniversary : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. மாமல்லபுரத்தில் நடந்த இந்த விழாவில் கட்சி உறுப்பினர்கள், பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடந்த ருசிகர விஷயங்களை இங்கு பார்ப்போம்.

Photos Of TVK 2nd Year Anniversary : மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சித்தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், தேர்தல் பிரச்சார பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1,200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல ருசிகரமான விஷயங்கள் நடந்தன. இது குறித்து இங்கு பார்ப்போம்.

1 /8

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடந்தது. இதில், விஜய்யுடன் பிரசாந்து கிஷோர், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அமர்ந்திருக்கும் காட்சி.

2 /8

பீகாரின் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

3 /8

இந்த மாநாட்டில், கட்சியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு இலையில் 21 வகையான உணவுகள் பறிமாறப்பட இருக்கிறது. இதில் ஒரு இலைக்கு மட்டும் ரூ.2000 விலையாம்.

4 /8

விஜய்யின் அரசியல் பயணம் குறித்த காணொளி ஒளிபரப்ப பட்டது. இதையடுத்து, புஸ்ஸி ஆனந்த், வரவேற்புறை அளித்தார்.

5 /8

மாநில, ஒன்றிய அரசுகளின் 5 கொள்கைகளை எதிர்த்து #Getout campaign-ஐ, விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர் இதில் கையெழுத்திட மறுத்து விட்டார். 

6 /8

விஜய்யின் பயிலகத்தில் பயின்ற 2 மாணவிகள் வந்து விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.

7 /8

இந்த விழா தொடங்குவதற்கு முன்னர், விஜய்யின் வீட்டில் கேரளாவில் இருந்து வந்த அவரது ரசிகர், அவரது வீட்டில் செருப்பை எறிந்தார். இது, தான் விஜய்க்கு அனுப்பும் மெசஜ் என்றும் தெரிவித்தார்.

8 /8

விஜய், விழாவிற்கு இடையே க்யூட்டாக ஹாய் காண்பித்த போட்டோ வைரலாகி வருகிறது.