TNEB | மழைக்காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Electricity Board Safety Guidelines | மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மின்சாரத்துறை வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றினால் மக்கள் மழைக்காலங்களில் மின் விபத்துகளில் இருந்து தங்களை உயிர் காத்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மின் விபத்துகளில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு மின்சாரத்துறை (Tamil Nadu Electricity Board Safety Guidelines) வெளியிட்டுள்ளது.
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர்பாக்ஸ் (pillar box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.
வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் மின் சுவிட்சுகைள 'ஆன்' செய்யும் போது கவனத்துடன் இயக்கவும்
தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவேதா மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.