உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் ரமலான் பண்டிகை பல இடங்களில் கோலமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமூக வலைதளங்களிலும் ரமலான் பண்டிகைக்கு வாழ்த்தும், தங்களது இஸ்லாமிய நண்பர்களிடம் பிரியாணி கேட்டும் பலரும் பதிவிட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து, இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இதனால், அவர்களின் வீடுகளில் இன்று பிரியாணி போன்ற உணவுகள் சமைக்கப்படும். இதனை அவர்கள் தங்கள் உற்றார், உறவினர்களுக்கு மட்டுமின்றி நண்பர்கள், சுற்றத்தாரர்கள், உள்ளிட்டவர்களுக்கும் பகரிந்தளித்து கொண்டாடுவார்கள். எனவே, வருடா வருடம் பிரியாணி குறித்த மீம்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் நிறைந்துவிடும்.
மேலும் படிக்க | லியோ படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்! விஜய் தான் காரணமா?
இந்நிலையில், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், ரமலான் அன்று தனது இஸ்லாமிய நண்பர்கள் கொடுத்த பிரியாணிகளை புகைப்படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது வாழ்த்தையும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்,"அன்பால தானா சேர்ந்த பிரியாணி... இன்று ரமலான் கொண்டாடும் அனைத்து இனிய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஈத் முபாரக்" என குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் பதிவு:
பல்வேறு பாத்திரங்களிலும், டப்பாக்களிலும் இருக்கும் பிரியாணியுடன் விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களையும் பதவிட்டுள்ளார். ஹாட் பாக்ஸ், பிளாஸ்டிக் பக்கெட், செராமிக் பாத்திரம், சில்வர் கேன் என அவரின் நண்பர்கள் மூலம் பிரியாணி குவிந்திருப்பதை அதில் காணலாம். மேலும், அந்த புகைப்படம் அவர் வீட்டின் சமையலறையில் வைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. புகைப்படம் ஒன்றில், பொருள்கள் கலைந்துகிடக்கும் அவரின் சமையலறை தெளிவாக தெரிகிறது.
இதை குறிப்பிட்டு ரசிகர்கள், நயன்தாரா - விக்னேஷ் சிவன் வீட்டிலும் கிச்சன், நமது வீடுகளில் இருப்பது போன்று கலைந்தே, ஒழுங்கில்லாமல்தான் இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர். பலரும் இதையொரு பாஸிடிவ் கமெண்டாகவும் பதிவிட்டு வருகின்றனர். கலைந்திருந்தால்தான் அது வீடு என்றும் தத்துவங்களை கொட்டி வருகின்றனர். இருப்பினும், அவரின் கமெண்ட் செக்ஷனில் Foodies-களின் கமெண்ட்ஸ் தான் அதிகமிருப்பதாக தெரிகிறது. தங்களுக்கு பிரியாணியே கிடைக்கவில்லை என்றும் எங்களுக்கு இதில் கொஞ்சம் தாருங்கள் என்றும் பலரும் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல் இரண்டு காதல் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ஆவார். இவரும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. மேலும், இவர்கள் இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து வளர்த்து வருகின்றனர். விக்னேஷ் சிவன், லைகா தயாரிப்பில் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விரைவில் தொடங்கும் 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2! ஹீரோ யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ