ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம்!

இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும்  கன்நெக்ட் மீடியா நிறுவனம்,  ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 25, 2025, 07:03 PM IST
  • இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா..
  • இதனை வாங்கிய இன்னொரு நிறுவனம்..
  • முழு விவரம்..
ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA  நிறுவனம்! title=

ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்'  ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT  MEDIA  நிறுவனம்.

ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT  மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின்  பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை உருவாக்குவதில் மாப் சீன் கடந்த இருபது ஆண்டுகளாக முன்னணி சக்தியாக இருந்து வருகிறது. 

மாப் சீன், ஆவதார், ட்யூன், ஜுராசிக் வேர்ல்ட், பஸ்ஸ் இன் பூட்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ், மார்வலஸ் மிஸ்ஸஸ் மைசெல் மற்றும் ‘‘ஏ கம்ப்ளீட் அன்நோன்' போன்ற வெற்றிப் படங்களுக்கு வெற்றிகரமான மார்க்கெட்டிங்க் விளம்பரங்களை உருவாக்கியுள்ளது. மேலும், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், குங்-ஃபூ பாண்டா, மினியன்ஸ் ஆகிய பிரபலமான படைப்புகளின் பிரச்சாரங்களிலும் மாப் சீன் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.

தற்போதைய இந்த ஒப்பந்தத்தின் மூலம், CONNEKKT  மீடியா, உலகளாவிய மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் தன்னுடைய நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், மும்பை, துபாய், டெல்லி NCR ஆகிய நகரங்களில் உள்ள கிளைகளுடன்,  மாப் சீனை சேர்த்துக் கொண்டிருப்பதன் மூலம்,  CONNEKKT மீடியா உலகளாவிய சந்தையில் ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளது. மாப் சீனுக்காக இந்த ஒப்பந்தத்தை க்ரெக் பெட்ரோசியன் மற்றும் மோகித் பாரீக் (Drake Star) ஆகியோர் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளனர்.

மாப் சீன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO டாம் கிரேன் கூறியதாவது.., 
“CONNEKKT  மீடியாவுடன் இணைவது மாப் சீனுக்கான ஒரு புதிய உற்சாக அத்தியாயமாகும். அவர்களின் முன்னணி ஊடக தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு துறையின் ஆழமான புரிதல், எங்களின் படைப்பாற்றல் கண்ணோட்டத்துடன் மிகச்சரியாக இணைகிறது. இந்த கூட்டணியின் மூலம், உலகளாவிய சந்தைகளில் எங்கள் பாதை  விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களின் மனங்களைக் கவரும் எமோஷனல் பிரச்சாரங்களை, விளம்பரங்களை இணைந்து உருவாக்குவதன் மூலம், புதிய எல்லைகளுக்குச் செல்வது சாத்தியமாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

CONNEKKT  மீடியாவின் இணை நிறுவனர் வருண் மத்தூர் கூறியதாவது.., 
“மாப் சீன், ஹாலிவுட் திரைப்பட மார்க்கெட்டிங்கில் நிகரற்ற தரத்தைக் கொண்ட நிறுவனமாக உள்ளது. அவர்களின் படைப்பாற்றல் திறனை எங்கள் பங்குதாரர்களான ஐக்கிய நாடுகள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆசியாவுக்குப் பரப்புவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் தொடங்கிய ஒரு உலகளாவிய மீடியா நிறுவனமாக, இந்த ஒப்பந்தம், எங்களுக்கான அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் பெற்ற ஒரு மாபெரும் வளர்ச்சியாகும். மாப் சீனின் முன்னணி படைப்பாற்றல் திறனையும், எங்களின் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தையும் இணைக்கும் போது, புவியியல் எல்லைகளைக் கடந்து, பல புதிய வடிவங்களில் மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் தாக்கத்தை, எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், பயனர்களுக்கும் வழங்க முடியும் ”

2006ஆம் ஆண்டு டாம் கிரேன் மற்றும் பிரையன் டேலியின் தலைமையில் நிறுவப்பட்ட நிறுவனம் தான் மாப் சீன், மிகப்பெரிய திரைப்படைப்புகள், டிரெய்லர்கள், பிரமோஸ், பிராண்டெட் கன்டெண்ட், ஆவணப்படங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய ஸ்டுடியோக்கள், ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் நெட்வொர்க்குகளான Netflix, Amazon, Disney, Warner Bros., Universal, Paramount, Sony, 20th Century Studios, Apple, Hulu உள்ளிட்ட நிறுவனங்களுக்கான சிறப்புப் பின்னணி கன்டெண்ட் வழங்கும் ஒரு புகழ்பெற்ற படைப்பாற்றல் ஏஜென்சியாகும்.

CONNEKKT  மீடியா என்பது உலகளாவிய மீடியா மற்றும் மீடியா-டெக் நிறுவனம். இதன் வணிகம் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்படங்களைத் தயாரிப்பது முதல், AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் உரிமைகள் சந்தை மற்றும் B2B ஸ்ட்ரீமிங் கன்டெண்ட் தீர்வுகள் வரை பரவியுள்ளது. CONNEKKT  மீடியாவின் தயாரிப்பு வரிசையில், மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விருபக்ஷா, நடிகர் தனுஷ் நடிப்பில், இசை மேதை இளையராஜா பற்றிய வாழ்க்கை வரலாறு  –  மற்றும் இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்  நடிக்கும், ஒரு அதிரடி தமிழ்த் திரைப்படம் உட்பட பல படங்களை உருவாக்கி வருகிறது.

மேலும் படிக்க | “அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன்..” தாத்தா SAC-யிடம் ஜேசன் சொன்னது! காரணம் என்ன?

மேலும் படிக்க | அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் ஜேசன் சஞ்சய்! வைரலாகும் சமீபத்திய புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News