Mamitha Baiju Next Movie Update: மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமா வரை பிரபலமாகி இருக்கிறார் நடிகை மமிதா பைஜு.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பிரேமலு திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வெற்றியை அடைந்த நிலையில், மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ரெபல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மமிதா பைஜு அறிமுகமானார்.
ஜனநாயகன்
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷுட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிங்க: மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2ஆம் திருமணம்? அவரது மனைவி போட்ட பதிவு! என்ன சொன்னார்?
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜு நடிக்கப்போகும் படம் குறித்து தற்போது ஒரு அதிரடியான தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி
அதன்படி சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் சேர்ந்து மமிதா பைஜு நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ