நீங்கள் வசீகரமானவர் என்பதை காட்டும் 5 அறிகுறிகள்! இதெல்லாம் இருக்கான்னு பாருங்க..

Signs That Reveal You Have A Magnetic Personality: நம்மில் பலர் நாம் வசீகரமானவர் என்பதையே மறந்து விடுகிறோம். நீங்கள் உண்மையிலேயே பிறரை ஏற்கும் குணாதிசயம் கொண்டவர் தானா என்பதை தெரிந்து கொள்ள, கீழ்காணும் அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை பாருங்கள்.‌

Written by - Yuvashree | Last Updated : Dec 11, 2024, 04:54 PM IST
  • நீங்கள் வசீகரமானவரா?
  • அழகாக இல்லையென்றாலும் பரவாயில்லை..
  • இந்த அறிகுறிகள் உங்களிடம் இருக்கான்னு பாருங்க..
நீங்கள் வசீகரமானவர் என்பதை காட்டும் 5 அறிகுறிகள்! இதெல்லாம் இருக்கான்னு பாருங்க.. title=

Signs That Reveal You Have A Magnetic Personality: மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரை எப்போதாவது பார்த்ததுண்டா? அவர்கள் இந்த சமுதாயம் கூறும்படி அழகாக இல்லை என்றாலும் அவர்களிடம் ஏதோ ஒரு வசீகரத்தன்மை இருக்கும். அவர்களைப் போல் நாமும் எப்படி வசீகரமாக இருப்பது என யோசித்து இருப்போம். இது போல பிறரை எந்தவிதமான அவர்களால் எப்படி வசீகரிக்க முடிகிறது? நீங்களும் அப்படி வசீகரமான ஒரு ஆள் தானா? இதற்கான பதில்களை இங்கு பார்ப்போம்.

உணர்ச்சி அதிர்வுகள் என்றால் என்ன?

இப்போதைய இளம் தலைமுறையினர் பலர் உபயோகிக்கும் ஒரு வார்த்தை, vibe. ஒருவருடைய ஆற்றல் தனக்கு பொருந்துகிறதா இல்லையா என்பதை பார்த்து பலர் பழகுகின்றனர். இதை தூய தமிழில் கூற வேண்டும் என்றால் உணர்ச்சி அதிர்வுகள் என கூறலாம். இப்படி நல்ல உணர்ச்சி அதிர்வுகள் இருக்கும் ஆட்கள், வசீகரமான குணாதிசயம் கொண்டவராக இருப்பர். அவர்களிடம் இருக்கும் அறிகுறிகள் என்ன? 

பிறர் உங்களை உற்று நோக்குவர்: 

நீங்கள் உணர்ச்சி அதிர்வுகள் நிரம்பிய வசீகரமான ஆளாக இருந்தால், யார் உங்களை தாண்டி சென்றாலும் உங்களை ஒரு நிமிடம் நின்று உற்று நோக்குவர். இதற்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களிடம் இருக்கும் பாசிட்டிவான ஆற்றல், பெருந்தன்மை குணம், நல்ல மனம் ஆகியவையே அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க செய்யும். 

குழந்தைகளுக்கு உங்களை பிடிக்கும்: 

எங்காவது வெளியில் சென்று கொண்டிருக்கும் போது, யார் என்றே தெரியாத ஒரு குழந்தை உங்களைப் பார்த்து சிரிக்கும். உங்களுக்கு ஹாய் காண்பிக்கும். குழந்தைகள் நல்ல உணர்வுகள் கொண்ட மனிதர்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். அவர்களிடம் உண்மையான கனிவான குணமும் மகிழ்ச்சியும் இருப்பதால் குழந்தைகள் பாதுகாப்பாக உணருகின்றனர். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு வசீகரமான ஆணாக இருந்தால் உங்களிடம் வரும் குழந்தைகள் இப்படி நடந்து கொள்ளும். 

மிருகங்கள் பாதுகாப்பாக உணரும்: 

மிருகங்கள் மனிதர்களை படிக்க தெரிந்தவை. நீங்கள் இதற்கு முன் அந்த விலங்கை பார்த்ததே இல்லை என்றால் கூட, உங்களைப் பார்த்த மாத்திரத்தில் அது உங்களிடமே ஓடிவரும். அது, நாயாக இருக்கலாம் அல்லது பூனையாக இருக்கலாம். அவை உங்களிடம் பாதுகாப்பாக உணர்கிறது என்றால் உங்களிடம் நல்ல உணர்வுகள் மற்றும் ஒரு வித அமைதியான எனர்ஜி இருக்கிறது என்று அர்த்தம்.

தெரியாதவர்கள் அவர்களின் வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்வர்: 

பெரிதும் பழக்கம் இல்லாத ஒரு நபர், உங்களிடம் வந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை கதையை கூறினால் உங்களிடம் வசீகரமான குணாதிசயம் இருக்கிறது என்று அர்த்தம். பார்த்தவுடன் ஒருவருக்கு உங்கள் மீது நம்பிக்கை வருவதற்கு காரணம் உங்களுக்குள் இருக்கும் அந்த பாசிட்டிவ் உணர்வாக இருக்கலாம். நல்ல உணர்ச்சிகள் கொண்ட மனிதர்கள், பிறர் மனம் திறந்து பேச சௌகரியப்பட்டவர்களாக உணர்வர்.

மேலும் படிக்க | இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள்... 2024இல் முதலிடம் எதற்கு?

சூழல் மாறுவது: 

ஒரு இடத்தில் சண்டை நடந்து கொண்டிருந்தால் கூட, நீங்கள் அங்கு நுழைந்தவுடன் அந்த சூழல் ஒருவித மாற்றத்திற்கு உள்ளாகும். நல்ல உணர்ச்சிகள் கொண்ட மனிதர்களுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கும். அவர்கள் ஒன்றும் செய்யாமல் ஒரு இடத்தில் இருந்தாலே போதும், அந்த சூழல் அவர்களுக்கு இணக்கமாக மாறலாம்.

பிறர் ஏக்கம் கொள்வர்: 

உங்களைப் பற்றி முழுதாக தெரியாதவர்கள் கூட உங்களை பார்த்து ஏக்கம் கொள்வர். அவர்களுக்கும் உங்களைப்போல் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களைப்போல அனைத்தையும் யோசிக்க வேண்டும் என்று நினைப்பர். 

உணர்ச்சிகளை சரியாக கையாளுபவராக இருப்பீர்கள்:

உங்களது குணாதிசயம் பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது என்றால், நீங்கள் உங்களுக்குள் ஏற்படும் உணர்ச்சியும் சரியாக கையாள்பவராக இருப்பீர்கள். சோகம், மகிழ்ச்சி, கோபம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வீர்கள். நெகட்டிவாக ஏதாவது சிந்தித்தாலும், அதையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என யோசிப்பீர்கள். 

மேலும் படிக்க | சோகமாக இருப்பவரை உற்சாகப்படுத்துவது எப்படி? 6 அற்புதமான வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News