ரயில் புறப்படுவதற்கு முன்பு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும்..! இந்த வழியை பின்பற்றுங்கள்

Train Ticket Booking : ரயில் புறப்படுவதற்கு முன்பு உங்களின் ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆக வேண்டும் என்றால் இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2025, 08:40 PM IST
  • ரயில் டிக்கெட் கன்பார்ம் வேண்டுமா?
  • உங்கள் ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும்
  • கரண்ட் டிக்கெட் புக் செய்வது எப்படி?
ரயில் புறப்படுவதற்கு முன்பு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும்..! இந்த வழியை பின்பற்றுங்கள் title=

How To Book Current Train Ticket : எப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைன் சென்றாலும் வெயிடிங் லிஸ்ட்டிலேயே இருக்கிறதா?, இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட் ரயில் புறப்படுவதற்கு முன்பு கன்பார்ம் ஆகிவிடும். அதற்கு நீங்கள் இங்கே சொல்லப்படும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். இப்போதெல்லாம் ஏன் ரயில் டிக்கெட் அதிகம் வெயிட்டிங் லிஸ்டிலேயே இருப்பதற்கு காரணம் இந்தியா முழுவதும் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் அதிகம் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில் ரயில் பயணத்தையே மக்கள் அதிகம் பொதுப்போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

அதனால் தொலைதூரம் செல்பவர்கள் எல்லாம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். இதனால் அவசர தேவைக்கு ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் தான் காட்டும். ஆனால் உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கன்பார்ம் ஆக வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் ரயில் பயணத்திற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே ரயில்  டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். 

Current Ticket முன்பதிவு தெரியுமா?

அதாவது தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் பற்றி தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கும் அதிக போட்டி இருக்கும். இந்த புக்கிங் ஓபன் ஆன சில மணி நிமிடங்களில் முடிந்துவிடும். வாய்ப்பு இருப்பவர்களுக்கு அதாவது அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு தட்கல் ரயில் டிக்கெட் கிடைக்கும். இதுதவிர இன்னொரு வழியும் இருக்கிறது. ஆம், ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். Current Ticket என்ற சேவையைப் பற்றி மக்கள் அறிந்திருப்பதில்லை. ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தால், இந்த இருக்கைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ரயில் புறப்படுவதற்கு சற்று முன்பு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. 

Current Ticket புக் செய்வது எப்படி?

Current டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஐ.ஆர்.சி.டி.சி.யின் வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தவிர, ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டருக்கும் சென்று டிக்கெட்டைப் பெறலாம். ரயில் புறப்படுவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன்பு உங்களுக்கு Current Ticke கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். திடீரென்று எங்காவது செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் கீழ், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு தற்போதைய டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். 

மேலும் படிக்க | இனி தட்கல் டிக்கெட் டக்குனு எடுக்கலாம்; எல்லா ரயில் சேவைகளுக்கும் இந்த செயலி போதும்!

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான குட் நியூஸ்..! ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது இதை மறக்காதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News