Delhi Latest News In Tamil: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இடையே ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி இடையே கடும் வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் அதிஷி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது தனக்குப் பின்னால் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டும் படத்தை காட்டி, தற்போதைய முதல்வர் ரேகா குப்தா நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தியாயும் வெளியிட்டு, பாஜக தலித் மற்றும் சீக்கிய எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது இரண்டு புகைப்படத்தையும் ஒப்பிட்டு, நாங்கள் (ஆம் ஆத்மி) இருக்கும் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் மற்றும் ஷாஹீத் ஆசம் பகத் சிங் புகைப்படங்கள் இருந்தன. ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் புகைப்படம் இங்கிருந்து நீக்கப்பட்டது. ஷாஹீத் ஆசம் பகத் சிங்கின் புகைப்படம் அகற்றப்பட்டது மற்றும் அவரது அதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளது எனக் கூறினார்.
இது நமது மரியாதைக்குரிய தியாகி பகத் சிங் ஜியின் தியாகங்களை மறைக்கும் சூழ்ச்சி. மேலும் மாமேதை அம்பேத்கரை ஓரம்கட்டும் முயற்சி எனவும், பாரதிய ஜனதா கட்சி தனது சீக்கிய எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது எனக் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
செய்தியாளர் மத்தியில் பேசிய முன்னாள் முதல்வர் அதிஷி, "பாஜகவின் தலித் விரோத மனநிலை நன்கு அறியப்பட்டதே. இன்று, அதன் தலித் விரோத மனநிலைக்கான ஆதாரம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் ஷாஹீத் பகத் சிங்கின் புகைப்படங்களை வைத்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த இரண்டு புகைப்படங்களையும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது பாஜக ஒரு தலித் மற்றும் சீக்கிய எதிர்ப்புக் கட்சி என்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.
बीजेपी को दलितों और सिखों से है गहरी नफ़रत
सरकार में आते ही बाबा साहेब और भगत सिंह जी की तस्वीर हटवाई। pic.twitter.com/9loyTc7R1w
— AAP (@AamAadmiParty) February 24, 2025
அதேபோல அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தளத்தில், "டெல்லியின் புதிய பாஜக அரசு பாபாசாகேப்பின் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளது. இது சரியல்ல. இது பாபாசாகேப்பின் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களை காயப்படுத்தியுள்ளது. பாஜகவிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. நீங்கள் பிரதமரின் புகைப்படத்தை வைக்கலாம், ஆனால் பாபாசாகேப்பின் புகைப்படத்தை அகற்ற வேண்டாம். அவரது புகைப்படம் அங்கேயே இருக்கட்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
दिल्ली की नई बीजेपी सरकार ने बाबा साहेब की फोटो हटाकर प्रधान मंत्री मोदी जी की फोटो लगा दी। ये सही नहीं है। इस से बाबा साहेब के करोड़ो अनुयायियों को ठेस पहुँची है।
मेरी बीजेपी से प्रार्थना है। आप प्रधान मंत्री जी की फोटो लगा लीजिए लेकिन बाबा साहिब की फोटो तो मत हटाइए। उनकी फोटो… https://t.co/k9A2HKFECV
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 24, 2025
ஆம் ஆத்மியின் குற்றசாற்றுக்கு பதில் அளித்த பாஜக, இதோ பாருங்கள்... பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படம் இருக்கிறது எனக்கூறி ஒரு படத்தை வெளியிட்டது. பின்னர் ஒரு வீடியோ வெளியிட்டு, முதலமைச்சர் நாற்காலிக்குப் பின்னால் மகாத்மா காந்தி, ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களும், அருகிலுள்ள உள்ள சுவர்களில் அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருப்பதை காட்டினர்.
இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா க்கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் இத்தகைய கூற்றுக்கள் அவர்களின் ஊழல் மற்றும் தவறான செயல்களை மறைக்க ஒரு தந்திரம் என்று கூறினார்.
மேலும் "பிரதமரின் புகைப்படம் வைக்கக் கூடாதா? நாட்டின் ஜனாதிபதியின் புகைப்படம் வைக்கக் கூடாதா? தேசப்பிதா காந்திஜியின் புகைப்படம் வைக்கக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், பகத் சிங் மற்றும் பாபாசாகேப் ஆகியோர் நாட்டின் மரியாதைக்குரிய ஆளுமைகள் மற்றும் எங்கள் வழிகாட்டி. எனவே, இந்த அறை டெல்லி முதல்வரின் அறை அரசாங்கத்தின் தலைவராக நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு (ஆம் ஆத்மி) பதிலளிப்பது எனது வேலை அல்ல. நான் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவன்" என்று அவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ (ANI) இடம் கூறினார்.
दिल्ली की मुख्यमंत्री श्रीमती @gupta_rekha एवं सभी मंत्रियों के कक्ष में श्रद्धेय महात्मा गांधी जी, बाबा साहेब भीमराव अंबेडकर जी, भगत सिंह जी, महामहिम राष्ट्रपति जी एवं प्रधानमंत्री जी के चित्र सुशोभित हैं। pic.twitter.com/zx6puyqr1w
— BJP Delhi (@BJP4Delhi) February 24, 2025
மேலும் படிக்க - கேஜ்ரிவாலை தோற்கடித்த ப்ரவேஷ் வர்மா... டெல்லி முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன்?
மேலும் படிக்க - Delhi New CM: யார் இந்த ரேகா குப்தா? டெல்லி புதிய முதலமைச்சரின் சுவாரஸ்ய பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ