Viral Video Bengaluru Woman Riding In Bike : இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே ஒரு சிலர், ஆபத்தான விஷயங்களை செய்வதுண்டு. போவோர் வருவோர்களை பிராங்க் என்ற பெயரில் ஏமாற்றுவதில் ஆரம்பித்து, கார் ஓட்டிக்கொண்டே வேலை செய்வது வரை இந்த ஆபத்துகள் நீள்கின்றன. அப்படித்தான், இங்கும் ஒரு பெங்களூருவில் ஒரு பெண் செய்துள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் புல்லட் பைக் ஓட்டிக்கொண்டு செல்கிறார். பார்ப்பவர்களுக்கு, இது சற்று வினோதமாக இருந்திருக்கிறது. காரணம், அந்த பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கொண்டு, ஒரு பெண் அந்த இளைஞரை முன்னால் இருந்து அணைத்தவாறு இருக்கிறார். அதிலும், அந்தபெண் இரு பக்கமும் காலை மேலே வைத்தது போல இருக்கிறார். அந்த இளைஞர், இரு பக்கம் பைகளை வைத்துக்கொண்டு, அந்த பெண்ணையும் மேலே மார்பில் சாய்த்துக்கொண்டு வண்டியை ஓட்டுகிறார். அவர் பின்னால் காரில் செல்பவர்கள்தான் இந்த வீடியோவை எடுத்திருக்கின்றனர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 26, 2025
தமிழ்நாட்டு வண்டி..
இந்த வீடியோவில் ஹைலைட்டே, அந்த இளைஞரும் பெண்ணும் சென்று கொண்டிருக்கும் வண்டி ஒரு தமிழ்நாட்டு வண்டி என்பதுதான். ஏற்கனேவ, பெங்களூருவில் இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டை பார்த்தால் ஆகாது. இப்போது இது போன்ற சம்பவங்கள் நடந்தால் கேட்கவா வேண்டும்?
மயக்கமானாரா?
அந்த வீடியோவை பார்க்கும் பாேது, அப்பெண் தலையை தூக்கவோ அவர் உடல் அவரது கட்டுப்பாட்டில் இருப்பது போலோ தெரியவில்லை என நெட்டிசன்க்ள கருதுகின்றனர். இதனால், அந்த பெண் மயக்க நிலையில் கூட அப்படி பயணித்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாமல போய் இருக்கலாம் என்றும், அதனால் டாக்ஸி அல்லது ஆட்டோவுக்காக காத்திருக்காமல் அந்த இளைஞரே அப்பெண்ணை பைக்கில் அழைத்து சென்றிருக்கலாம் என்றும் ஒரு நெட்டிசன் கூறியிருக்கிறார்.
சஞ்சாபுரா முக்கிய சாலையில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது பல ஆயிரம் லைக்ஸ்களையும் ஷேர்ஸ்களையும் கடந்திருக்கிறது.
படம் மாதிரி..
தென்னிந்தியாவின் ஹிட் படம் ஒன்றில், ஹீரோயின் ஹீரோவை இப்படி முன்னிருந்து கட்டிப்பிடித்தவாறு செல்லும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். இப்பாேது அதே போன்ற காட்சி ரியாலிட்டியிலும் நடப்பதால், இதனை கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ, தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும் படிக்க | மீன் பீர் குடிக்கும் வீடியோ! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..வைரலாகும் வீடியோ
மேலும் படிக்க | குழந்தைகளை தூக்கிலிட்ட பள்ளி நிர்வாகம்! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ