விஸ்வரூபம் எடுக்கும் மொழி பிரச்சினை.. உச்சகட்ட பதற்றம்.. பெண்ணின் தாய் கோரிக்கை!

Language War: மூன்று நாட்களாக போக்குவரத்து சேவை அங்கு முடங்கி இருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரு மாநில மக்களிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கைகளை வைத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 25, 2025, 07:37 PM IST
விஸ்வரூபம் எடுக்கும் மொழி பிரச்சினை.. உச்சகட்ட பதற்றம்.. பெண்ணின் தாய் கோரிக்கை! title=

Karnataka & Maharashtra Row: கர்நாடகாவில் மராட்டி மொழியில் பேசக்கூறி நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. ஏற்கனவே மூன்று நாட்களாக போக்குவரத்து சேவை அங்கு முடங்கி இருக்கிறது. இயல்பு நிலை என்பது தற்போது வரை திரும்பவில்லை. நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரம் தற்போது ஒரு மொழி பிரச்சனையாக மாறியிருக்கிறது. கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா பேருந்துகளின் எழுத்துக்களை அழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே நிலைதான் மகாராஷ்டிராவிலும் தொடர்கிறது. 

இரண்டு மாநில மக்கள் பாதிப்பு

கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிராவின் பூனே, மும்பை, சோலாபூர் பகுதிகளுக்கு செல்லும் 250 பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பெலகாவி மாவட்டத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு வியாபாரத்திற்காக செல்லும் ஏராளமான வியாபாரிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

கன்னட அமைப்பினர் கோரிக்கை

ஒரு மாநில அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தாலும், இந்த கன்னட ஆதரவு அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் கர்நாடகாவை பொறுத்தமட்டில் நடத்துனர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கன்னட அமைப்பினர் வலியுறுத்தி இருக்கிறார்கள். 

மராட்டி அமைப்பினர் கோரிக்கை

அதேபோல மகாராஷ்டிராவிலும் கன்னடர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்த பிரச்சனை இரு மாநில அரசுகள் கையில் எடுக்க வேண்டியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியது..

பெண்ணின் தாய் இந்த வழக்கில் தொடர்புடைய மைனர் பெண்ணின் குடும்பத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) போக்சோ வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில மக்களிடம் இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் என்று சிறுமியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் தாய் கூறுகையில், எனது மகனும் மகளும் டிக்கெட் பெற்று மருத்துவமனைக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. நடத்துனர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார். ஆனால் இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நெருக்கடி சூழ்நிலையாகவும், மொழி தொடர்பான மோதலாகவும் மாறியதில் நாங்கள் கவலையும் வருத்தமும் அடைகிறோம். நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வர வேண்டும். இது டிக்கெட் தொடர்பான சண்டை. நாங்கள் வழக்கை வாபஸ் பெறுகிறோம்" என்று அந்த தாய் கூறியுள்ளார்.

கர்நாடகா போக்குவரத்து அமைச்சர் என்ன சொன்னார்?

போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூருவில் கூறுகையில், "நான் நேற்று (திங்கட்கிழமை) பெலகாவிக்குச் சென்று மருத்துவமனையில் நடத்துனரைச் சந்தித்தேன். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளிடமும் விவாதித்தேன். கர்நாடகாவில் இருந்து எந்த ஆர்டிசி பேருந்துகளும் மகாராஷ்டிராவிற்குச் செல்வதில்லை, மகாராஷ்டிராவிலிருந்து எந்த பேருந்துகளும் கர்நாடகாவிற்குள் வருவதில்லை. தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எங்கள் தலைமைச் செயலாளரிடம் பேசியுள்ளேன். இந்த விஷயத்தை முதல்வர் சித்தராமையாவிடமும் தெரிவித்துள்ளேன்," என்று அமைச்சர் ரெட்டி கூறினார்.

மகாதாயி நதி பிரச்சனை

ஏற்கனவே மகாதாயி நதி பிரச்சனையின் போது பேருந்துகளை இயக்குவதற்காக போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இரு மாநிலத்திற்கும் இடையே போக்குவரத்து இயக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் தான் போக்குவரத்தானது தொடங்கும் சூழல் உருவாகி வருகிறது. 

பேருந்து சேவைகள் நிறுத்தம்

மொழிப் பிரச்சினை காரணமாக இரு மாநிலங்களையும் சேர்ந்த பேருந்து ஊழியர்கள் மீது இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான பேருந்து சேவைகள் இரு அரசாங்கங்களாலும் நிறுத்தப்பட்டன.

மேலும் படிக்க - அம்பேத்கர் & பகத்சிங் புகைப்படம்! ஆம் ஆத்மி vs பாஜக இடையே கடும் வாரத்தை போர்

மேலும் படிக்க - காவல் நிலைய கழிவறையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்! வைரலான வீடியோவால் பரபரப்பு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News