பாடகர் யேசுதாசுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

பிரபல பாடகர் யேசுதாசின் 80 ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 10, 2020, 01:52 PM IST
பாடகர் யேசுதாசுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து  title=

பிரபல பாடகர் யேசுதாசின் 80 ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரை இசையில் கொடி கட்டிப்பறந்து வருகிறார் யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகள் என 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். 

அந்தவகையில் இன்று 80 ஆவது பிறந்த நாள் காணும் அவருக்கு உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாடகர் யேசுதாசுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார், 

இந்தியாவின் கலாச்சார வளத்திற்கு யேசுதாஸ் மதிப்பிடமுடியாத பங்களிப்பை நடத்தி உள்ளதாக பாராட்டி இருக்கிறார். அனைத்து வயது ரசிகர்களின் மத்தியிலும் யேசுதாசின் இனிமையான பாடல்கள் பிரபலமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ள மோடி, யேசுதாஸ் நீண்ட நாட்கள் வாழ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News