சர்வதேச யோகா தினம்: ராஞ்சியில் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி!!

Last Updated : Jun 21, 2019, 09:10 AM IST
சர்வதேச யோகா தினம்: ராஞ்சியில் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி! title=

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5 வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்; உலகம் முழுவதும் மக்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.  நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா எப்போதுமே இடம் பிடித்து வருகிறது.  யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும்
யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது.  

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் யோகா ஆயுள் முழுவதும் கைகொடுக்கும்.  நம் அன்றாட வாழ்வின் அங்கமாக யோகா மாறி வருகிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும்.  உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்” இவ்வாறு அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, பல்வேறு யோகாசனங்களையும் பிரதமர் மோடி செய்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மைதானத்தில் 28 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநில ஆளுநர் திரெளபதி முர்மு, மாநில முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், மாநில சுகாதார துறை அமைச்சர் ராமசந்திர சந்திரவன்ஷி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

Trending News