பப்பாளி ஊட்டசத்தின் களஞ்சியமாக இருக்கும் அற்புதமான பழம். பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. குறிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பப்பாளி அமிர்தம் போன்றது.
காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற என்சைம் உணவை ஜீரணிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பப்பாளி பழத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமானம் வேகமாக நடக்கும்.
2. பப்பாளி உங்கள் உடலை டீடாக்ஸ் செய்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம், உடலில் இருந்து கழிவுப்பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன. மேலும், காலையில் மலம் கழிப்பதில் சிரமப்படுபவர்களுக்கு இந்த பழம் அமிர்தம் போன்றது.
3. மலச்சிக்கல் மட்டுமல்ல அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளால்அவதிப்பட்டால், கண்டிப்பாக இதை உட்கொள்ளுங்கள். இதனை உட்கொள்வதால் உங்கள் செரிமானம் வலுவடைவதோடு, வயிற்றின் pH அளவும் சீராக இருக்கும்.
4. உங்கள் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடுங்கள். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
5. பப்பாளியில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஒரு நன்மை பயக்கும் கனிமம் ஆகும். இதை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்
6. உடல் எடையை குறைக்க பப்பாளி உதவுகிறது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதனுடன் கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து காலை உணவாகவும் சாப்பிடலாம்.
7. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பப்பாளி பழத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இந்த பழத்தை வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
8. பப்பாளியில் கோலின் சத்து, பாப்பைன் மற்றும் வைட்டமின் சி போன்ற அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இதனால், மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் பிற அழற்சி நிலைகளுடன் தொடர்புடைய உடல் நல பிரச்சனைகளை போக்க உதவும்.
9. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
10. பப்பாளி வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையை கூர்மை படுத்துவதோடு, மாகுலர் டிஜெனரேஷன், மாலை கண் நோய் போன்றவற்றை தடுக்கிறது.
11. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக பப்பாளி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கான சிறந்த பழமாக இருக்கும். இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை பெற உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ