மத்திய அரசின் மாஸ்டர் பிளான்: இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்.... புதிய ஓய்வூதிய திட்டம்

Universal Pension Scheme: தொழிலாளர் அமைச்சகம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்புத் திட்டம் குறித்த ஆய்வுகளையும் விவாதங்களையும் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், இதற்கான விதிகள் மற்றும் விவரங்களை சீராக்கி மேமப்டுத்த அரசாங்கம் முக்கிய பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்தும் என்று கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2025, 02:38 PM IST
  • புதிய ஓய்வூதிய திட்டம்.
  • இதற்கான அவசியம் என்ன?
  • பணியை தொடங்கிய தொழிலாளர் அமைச்சகம்.
மத்திய அரசின் மாஸ்டர் பிளான்: இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்.... புதிய ஓய்வூதிய திட்டம் title=

Universal Pension Scheme: பணி ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை பெற ஓய்வூதியம் மூலம் வரும் வருமானம் ஒரு முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. பாரம்பரிய வேலை சார்ந்த திட்டங்களுக்கு அப்பால் மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு புதிய உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை கோண்டு வரும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Labour Ministry: பணியை தொடங்கிய தொழிலாளர் அமைச்சகம்

தொழிலாளர் அமைச்சகம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்புத் திட்டம் குறித்த ஆய்வுகளையும் விவாதங்களையும் தொடங்கியுள்ளது. இந்த ஓய்வூதிய முறை, மக்களின் வேலைவாய்ப்பு அல்லது வருவாய் நிலையை பொருட்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய அனுமதிக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கான கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், இதற்கான விதிகள் மற்றும் விவரங்களை சீராக்கி மேமப்டுத்த அரசாங்கம் முக்கிய பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்தும் என்று கூறப்படுகின்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கான அவசியம் என்ன?

ஏற்கனவே உள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து, அவற்றை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் நோக்கமாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமான இது, அனைவருக்குமானதாக இருக்கும். இது குறிப்பிட்ட பணிகள் அல்லது வணிகத் துறைகளுக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்படாது.

இந்தத் திட்டம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் கவரேஜை மேம்படுத்த அரசாங்கத்தால் நடத்தப்படும் சில ஓய்வூதியத் திட்டங்களை உள்வாங்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. இந்த பங்களிப்புத் திட்டத்தில் அமைப்புசாரா துறை பணிகள், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 18-60 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Pension Schemes in India: இந்தியாவில் உள்ள முக்கிய அரசாங்க ஓய்வூதியத் திட்டங்கள் என்ன?

தற்போது, ​​இந்தியாவில் அரசாங்கம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்காக பல ஓய்வூதியத் திட்டங்களை நடத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் ஓய்வுக்குப் பிறகு மக்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அரசாங்கத்தால் நடத்தப்படும் அப்படிப்பட்ட சிறந்த 7 ஓய்வுதியத் திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் (APY)

அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தத் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 60 வயதிற்குப் பிறகு, இது ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. இதற்கு பயனாளிகள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்.

National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)

இது ஒரு தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாகும். இது அரசு, தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சாதாரண குடிமக்களுக்கும் கிடைக்கிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஓய்வு பெறும் நேரத்தில் மொத்த தொகை மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் பெறலாம்.

Employees’ Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95)

ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிபவர்களுக்கு, இந்தத் திட்டம் எதிர்கால பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. EPFO ​​நடத்தும் இந்தத் திட்டத்தில், நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் 8.33% தொகையை ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்கிறார். இதி பணியாளர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.

Pradhan Mantri Kisan Mandhan Yojana: பிரதம மந்திரி கிசான் மான் தன் யோஜனா (PM-KMY)

இந்தத் திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தொடர்ந்து ரூ.55 முதல் ரூ.200 வரை பங்களித்து வந்தால், 60 வயதிற்குப் பிறகு ரூ.3,000 மாத ஓய்வூதியம் கிடைக்கும்.

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனா (PM-SYM)

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு அரசுத் திட்டமாகும். தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், தொழிலாளிகள் அல்லது அமைப்புசாரா துறையில் பணிபுரியும் நபர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். இதில் 60 வயதிற்குப் பிறகு, பயனாளிக்கு ரூ.3,000 மாத ஓய்வூதியம் கிடைக்கும்.

Pradhan Mantri Vyapari Mandhan Yojana: பிரதம மந்திரி வியாபாரி மான் தன் யோஜனா (PMVYMY)

வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் (பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தன் யோஜனா) என்பது கடைக்காரர்கள்/சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். நீங்கள் ஒரு சிறு தொழிலதிபராகவோ அல்லது சுயதொழில் செய்பவராக இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் 60 வயதை அடையும் வரை ரூ.55 முதல் ரூ.200 வரையிலான தொகையை டெபாசிட் செய்யலாம். 60 வயதிற்குப் பிறகு, இதில் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கிறது. 

Swavalamban Yojana: ஸ்வாவலம்பன் யோஜனா (இப்போது NPS-லைட் என்று அழைக்கப்படுகிறது)

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிய மற்றும் மலிவு ஓய்வூதியத் திட்டமாகும். இது தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) இலகுவான வடிவமாகும். இது சிறு முதலீட்டாளர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்... இனி உங்கள் பணம் ரொம்ப பாதுகாப்பாக இருக்கும்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: CGHS, கூடுதல் ஓய்வூதியம், ஊதிய உயர்வு.... ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News