8th Pay Commission Latest News: மத்திய அமைச்சரவை ஜனவரி 2025 இல் 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. எனினும், இந்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோர் இன்னும் நியமிக்கப்படவில்லை. 8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகளுக்காக (TOR) தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு கவுன்சிலிடமிருந்து (NC-JCM) மத்திய அரசு பரிந்துரைகளைக் கோரியுள்ளது.
Terms of Reference: முக்கிய பரிந்துரைகள்
புதிய 8வது ஊதியக்குழு குறைந்தபட்சம் 5 பதவி உயர்வுகளை பரிந்துரைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று NC-JCM இன் ஊழியர் தரப்பு கூறியுள்ளது. சம்பளக் குழு MACP திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, அதனுடன் குறைந்தது 5 பதவி உயர்வுகளையாவது (Promotions) பரிசீலிக்க வேண்டும் என்று NC-JCM தரப்பு கூறுகிறது.
Modified Assured Career Progression: மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றம்
மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றம் (MACP) திட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் 30 ஆண்டு சேவைக் காலத்தில் குறைந்தது மூன்று பதவி உயர்வுகளைப் பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்படுகின்றது. தற்போது, MACP இன் கீழ் ஊழியர்கள் அனைவருக்கும் 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் சேவையில் மூன்று பதவி உயர்வுகளை மத்திய அரசு உறுதி செய்கிறது.
Salary Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழுவில் எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும் என்பது ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்து இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 க்குள் நிர்ணயம் செய்யப்படும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டரை கணக்கில் எடுத்துக்கொண்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சாத்தியமான சம்பள திருத்தம் 92-186% க்கு இடையில் இருக்கக்கூடும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்காக விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்
சம்பள அமைப்பு: அனைத்து வகை ஊழியர்களுக்கும் சம்பள அமைப்பு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஊதிய விகிதங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.
குறைந்தபட்ச ஊதியம்: Aykroyd சூத்திரம் மற்றும் 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளின் அடிப்படையில் சீரான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல்.
அகவிலைப்படி: சிறந்த நிதி பாதுகாப்பிற்காக அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியை இணைத்தல்.
ஓய்வூதிய சலுகைகள்: ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதிய சலுகைகளை திருத்துதல். மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீட்டமைத்தல்.
மருத்துவ சலுகைகள்: பணமில்லா மற்றும் பிரச்சனை இல்லாத மருத்துவ சேவைகளுக்கான CGHS வசதிகளில் மேம்பாடு.
கல்வி உதவித்தொகை: முதுகலை நிலை வரை குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தை மேம்படுத்துதல்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ